என்னை அதிகம் காதலிப்பவர் என குறிப்பிட்டு மனைவி சாயிஷா இரண்டாவது இடம் என கூறி இருக்கிறார்.
நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷா இருவரும் கடந்த 2019ல் திருமணம் செய்துகொண்டனர். அவர்கள் காதல் திருமணம் செய்துகொண்டதாக கூறப்பட்டாலும், அது arranged திருமணம் தான் என அவர்கள் விளக்கம் கூறினார்.
மேலும் கடந்த வருடம் ஜூலை மாதத்தில் ஆர்யா - சாயிஷா ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அவர் Ariana என பெயர் சூட்டி இருக்கின்றனர். ஆர்யா ஒருபக்கம் படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் சாயிஷாவும் பிரசவத்திற்கு பிறகு தனது உடல் எடையை குறைப்பதற்காக அதிகம் ஒர்கவுட்டில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று ஆர்யா - சாயிஷா ஜோடிக்கு மூன்றாவது திருமண நாள் என்பதால் அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி இருக்கின்றனர்.
மனைவிக்கு வாழ்த்து கூறி ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் ஆர்யா, "Happy 3rd Anniversary to the best partner I can wish for in this world. Thank you so much for caring motivating supporting and loving me the most ( actually 2nd most now) Love you @sayyeshaa" என குறிப்பிட்டு இருக்கிறார்.
"என்னை அதிகம் காதலிக்கும்" என குறிப்பிட்டுவிட்டு 'actually 2nd most now' என அவர் கூறி இருப்பதால், ஆர்யா தனது மகளை பற்றி தான் மறைமுகமாக குறிப்பிட்டு இருக்கிறார்.