உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்ய இராணுவத்தினருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கின்றனர் உக்ரைன் பெண்கள் படையணி.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இன்றுடன் 15 நாட்கள் ஆகிறது. தலைநகர் கீவை கைப்பற்ற ரஷ்ய படைகள் பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றன.
எனினும் உக்ரைன் படையினரின் கடும் எதிர்த்தாக்குதலால் இந்த முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தலைநகர் கீவின் போரோடியங்கா பகுதிக்குள் நுழைய முயன்ற ரஷ்ய தாங்கிகளை உக்ரைன் பெண்கள் பாதுகாப்பு படை ஓடஓட தகர்த்தெறிந்து அதிரடி காட்டியுள்ளது.