More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • பேரறிவாளனுக்கு பிணை - சீமான் வரவேற்பு
பேரறிவாளனுக்கு பிணை - சீமான் வரவேற்பு
Mar 10
பேரறிவாளனுக்கு பிணை - சீமான் வரவேற்பு

பேரறிவாளனுக்கு பிணை வழங்கியதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்பு அளித்துள்ளார்.



இது தொடர்பில் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது,



30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் என்னுயிர் தம்பி பேரறிவாளன் அவர்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டுள்ள செய்தியறிந்தேன். நீதியரசர் நாகேஷ்வர்ராவ் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு வழங்கியுள்ள முதன்மைத்துவம் வாய்ந்த இம்முடிவை வரவேற்கிறேன்!



வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இவ்வழக்கினை முன்னின்று நடத்திய மூத்த வழக்கறிஞர் மதிப்பிற்குரிய கோபால் சங்கரநாராயணன் அவர்களுக்கும், அன்புத் தம்பிகள் வழக்கறிஞர்கள் பாரிவேந்தன், பிரபு இராமசுப்பிரமணியன் அவர்களுக்கும் எனது பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.



இவ்வழக்கின் விசாரணை வளையம் முழுமையாக விரிவடையாத நிலையில், நேர்மையாக விசாரணை இதுவரை நடத்தப்படாத சூழலில், செய்யாத குற்றத்திற்காக முப்பது ஆண்டுகாலத்தைச் சிறைக்கொட்டடிக்குள்ளேயே கழித்த தம்பி பேரறிவாளனுக்குத் தற்போது பிணை கிடைத்திருப்பது பெரும் ஆறுதலைத் தருகிறது.



கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக நடந்தேறிய சட்டப்போராட்டத்தில் உச்ச நீதிமன்றத்தின் இவ்வுத்தரவு மிக முக்கியமானதொரு மைல் கல்லாகும். தற்போது கிடைக்கப்பெற்றிருக்கிற பிணை எனும் தற்காலிகத்தீர்விலிருந்து விடுதலை என்பதனை நோக்கி நகர்த்திச்செல்வதே முழுமையான மகிழ்ச்சியைத் தரும் நல்லறிவிப்பாகும்.



அதனை சாத்தியப்படுத்த தம்பி பேரறிவாளனுக்கு முழுமையாகத் துணைநிற்க வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.   






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug19

போலந்து நாட்டில் நடந்த உலக இளையோர் வில்வித்தை சாம்பிய

Jan22

கேரளாவில் லட்சக்கணக்கில் மதிப்பிலான லொட்டரி சீட்டுக

Mar21

கேரளாவில் ஏழைகளுக்காக 5 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படு

Jun17

குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் <

Jan30

சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,30,982

Apr26

கொரோனாவின் 2-வது அலையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வங

Apr09

இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்

May27

தமிழ்நாட்டில் கொரோனாவின் 2-வது அலை பரவியதன் காரணமாக கட

Jun27