More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • புடினை தடுக்காவிட்டால் ..... பரபரப்பை கிளப்பும் உக்ரைன் அதிபரின் மனைவி!
புடினை தடுக்காவிட்டால் ..... பரபரப்பை கிளப்பும் உக்ரைன் அதிபரின் மனைவி!
Mar 10
புடினை தடுக்காவிட்டால் ..... பரபரப்பை கிளப்பும் உக்ரைன் அதிபரின் மனைவி!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரப்பு போர் தொடர்ந்துவரும் நிலையில், பொதுமக்களைக் காப்பாற்றுகிறோம் என்ற சாக்குப்போக்கில் நாளை உங்கள் நகரங்களிலும் ஆக்ரோஷமாக ரஷ்ய படைகள் நுழைந்தால் உலகில் பாதுகாப்பான இடம் என ஒன்று இருக்காது என உக்ரைன் அதிபர் மனைவி ஒலேனா ஜெலன்ஸ்கா  (Olena Zelenska) கூறியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



உக்ரைனில் இன்று 14வது நாளாக போர் தொடர்ந்துவரும் நிலையில் ரஷ்யா தனது போர் நடவடிக்கையை கைவிட வேண்டும் என உலக நாடுகள் கூறி வருகின்றன. எனினும் அதை காதில் வாங்காத ரஷ்யா தொடர்ந்து உக்ரைனில் படைகளை முன்னேற்றி செல்கிறது.



இதனால் உக்ரைன் பொதுமக்களில் ஒரு தரப்பினர் துப்பாக்கி ஏந்தி தாய்நாட்டை காக்கும் நிலையில், முதியவர்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் என 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர். இதற்கிடையே உக்ரைன்-ரஷ்யா இடையே போர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.



இதில் சுமூக முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இதனால் போர் முடிவுக்கு வருவதில் சிக்கல் நீடிக்கின்றது. இதற்கிடையே உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டும் மேற்குலநாடுகள், ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வரும் ந்நிலையில், இது ரஷ்ய அதிபர் புடினை மேலும் கோபமடைய செய்துள்ளது.



இதனால் உக்ரைனில் போர் இன்னும் தீவிரமாகலாம் என கூறப்படுகிறது. எனினும் உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து தன் நாட்டு மக்களிடம் உரையாற்றி உத்வேகம் வழங்குவதுடன்,   போர் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வர உதவுமாறு உலகநாடுகளிடம் வலியுறுத்தி வருகிறார்.



இந்நிலையில் உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கியின் (Volodymyr Zelenskyy) மனைவி ஒலேனா ஜெலன்ஸ்கா (Olena Zelenska) ஊடகங்கள் வாயிலாக உலக நாடுகளிடம் கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார். அதில்,



பிப்ரவரி 24ல் ரஷ்யா படையெடுத்துள்ளது என்ற தகவலோடு கண்விழித்தோம். பீரங்கி வண்டிகள் உக்ரைன் எல்லைக்குள் நுழைந்தன. விமானங்கள் எங்களின் விமானப்படை தளங்களில் நுழைந்ததோடு, நகரங்களில் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. சிறப்பு நடவடிக்கை என ரஷ்யா கூறுகிறது.



ஆனால் உண்மையில் இது உக்ரைன் குடிமக்களின் வெகுஜன படுகொலை என அவர் சாடியுள்ளார். ரஷ்யாவின் தாக்குதலில் மிகவும் பயங்கரமான, கொடூரமான விஷயம் என்னவெனில் பச்சிளம் குழந்தைகளின் உயிரிழப்புகளாகும்.



ஓக்திர்கா தெருவில் 8 வயது ஆலிஸ், கீவ் நகரில் பொலினா தனது பெற்றோருடன் குண்டுவீச்சில் பலியானார். 14 வயது அர்செனி தலையில் காயமடைந்த நிலையில் சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காமல் இறந்தார். பொதுமக்களுக்கு எதிராக போர் செய்யவில்லை என ரஷ்யா கூறுவதால் இறந்தவர்களின் பெயர்களை கூறி உள்ளேன். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏராளாமானவர்களுக்கு சிகிச்சை தடைப்பட்டுள்ளது.



ஆஸ்துமா, இன்சுலின் செலுத்தி கொள்வோரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் (Olena Zelenska)  அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறும் நபர்களால் ரோடுகள் நிறைந்து காணப்படுகிறது. சிறுவர்கள், பெண்கள் என அனைவரும் சுரங்கங்களில் தஞ்சமடைந்து தவித்து வருகின்றனர். பெண்கள் தங்களின் குழந்தைகளுடன் தரையில் படுத்து கிடக்கின்றனர்.



கீவ், கார்கீவ் நகரங்களில் இருந்து வெளியான படத்தில் நீங்கள் இதை உணர்ந்திருப்பீர்கள். சில நகரங்களில் குடியிருப்புகளை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. உக்ரைன் அமைதியை விரும்புகிறது. மேலும் உக்ரைன் தனது எல்லைகளையும், அதன் அடையாளத்தையும் பாதுகாக்கும். இதை ஒருபோதும் விட்டு கொடுக்காது.



அதேசமயம் ஏவுகணை தாக்குதல்கள் தொடரும் நகரங்களில் இடிபாடுகளுக்குள் சிக்கிய மக்கள் பலநாட்கள் வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். மனிதாபிமான அடிப்படையில் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றவும், அவர்களுக்கு உதவி செய்யவும் வழி வேண்டும். இதனால் அதிகாரத்தில் இருப்பவர்கள் உக்ரைன் வான்வெளியை மூட வேண்டும். தரைப்பகுதியில் நடக்கும் போரை நாங்களே களத்தில் நேருக்கு நேராக சந்தித்து கொள்வோம்.



ஊடகங்களே, நான் உங்களிடம் வேண்டுகோள் வைக்கிறேன். இங்கு நடப்பதை காட்டுங்கள். உண்மையை காட்டுங்கள். ரஷ்யா நடத்தும் போரில், ஒவ்வொரு ஆதாரமும் முக்கியமானது என்றும் அவர் கூறியுள்ளார்.



மேலும் பொதுமக்களைக் காப்பாற்றுகிறோம் என்ற சாக்குப்போக்கில் நாளை உங்கள் நகரங்களில் ஆக்ரோஷமாக படைகள் நுழையலாம். அணு ஆயுதப் போரைத் தொடங்குவேன் என்று மிரட்டும் ரஷ்ய அதிபர் புடினை தடுக்காவிட்டால் உலகில் யாருக்கும் பாதுகாப்பான இடம் இருக்காது என உர்ரைன் அதிபரின் மனைவி (Olena Zelenska) உருக்கமாக கூறியுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr14

ரஷியாவுடனான போரில் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு ம

Jun01

இஸ்ரேலில் கடந்த 2 வருடங்களில் 4 முறை நாடாளுமன்ற தேர்தல்

Mar21

இலங்கைக்கு இந்தியா 5 லட்சம் ஆக்ஸ்போர்டு-ஆஸ்ட்ரா ஜெனகா

Mar30

அன்சோரேஜ்: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் அன்கரேஜ

Mar24

துபாயில் பொதுமக்கள் மத்தியில் இதயநோய் குறித்த விழிப்

Mar28

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட

Feb11

பிரிட்டன் ராணி எலிசபெத் அரியணையில் அமர்ந்து 70 ஆண்டுகள

Apr06

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த மாத இறுதியில்

Jul01

உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரசை கண்டறிய பல்வேறு பரி

Jan11

அமெரிக்கா - கலிபோர்னியா - லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விமானமொன

Jun26

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நக

Mar11

இந்தோனேசியா அதன் தலைநகரான ஜகார்த்தாவை கைவிட்டு, போர்ன

May02

கருங்கடலில் இரண்டு ரஷ்ய ரோந்துக் கப்பல்களை உக்ரைனிய ஆ

Sep21

ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அணிதிரட்டல் உத்தரவுக

Aug06

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா