More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ரஷ்யா இந்த நாட்டினால் தண்டிக்கப்பட வேண்டும்! உக்ரைன் எம்.பி நம்பிக்கை!
ரஷ்யா இந்த நாட்டினால் தண்டிக்கப்பட வேண்டும்! உக்ரைன் எம்.பி நம்பிக்கை!
Mar 10
ரஷ்யா இந்த நாட்டினால் தண்டிக்கப்பட வேண்டும்! உக்ரைன் எம்.பி நம்பிக்கை!

இந்த நூற்றாண்டின் விதியை தீர்மானிக்க போகும் மிகப்பெரும் சக்தியாக இந்தியா இருக்குமென உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.



உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் 14 வது நாளாக தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. ரஷ்யப் துருப்புகளுக்கு எதிராக தற்போது அங்குள்ள பொதுமக்களும் கைகளில் ஆயுதமேந்தி சண்டையிட்டு வருகின்றனர்.   



இது, ரஷ்ய துருப்புகளின் முன்னேற்றத்தை பல இடங்களில் தடுத்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், ராணுவம் ஒருபுறம், பொதுமக்கள் ஒருபுறம் என இரு முனை தாக்குதலை ரஷ்ய துருப்புகள் சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.



இதேவேளை, உக்ரைனைச் சேர்ந்த இளம் எம்.பி.யான ஸ்வியாட்டோஸ்லாவ் யுராஷும் (Sviatoslav Yurash) உக்ரைன் ராணுவத்தினருக்கு துணையாக துப்பாக்கியை ஏந்தி களத்தில் இறங்கி சண்டையிட்டு வருகிறார். இதுதொடர்பான செய்திகள் அண்மைக்காலமாக ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் இருந்தன.  



இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியது, 



உக்ரைன் நாட்டை அந்நியர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கும் வரை நாங்கள் ஆயுதத்தை கைவிட மாட்டோம். உயிர் இருக்கும் வரை தாய்நாட்டுக்காக போராடுவோம். இந்த போர் சூழலில், உக்ரைனுக்கு பல நாடுகள் உதவி செய்து வருகின்றன.அதில் குறிப்பிடத்தக்க நாடு இந்தியா. உக்ரைன் மக்களுக்காக இந்தியா செய்து வரும் மனிதாபிமானமிக்க உதவிகளை நாங்கள் மறக்க மாட்டோம். இந்த நூற்றாண்டை தீர்மானிக்கப் போகும் சக்தியாக இந்தியா இருக்கிறது.



உக்ரைன் - ரஷ்யா போரில் தாங்கள் எடுத்து வரும் நிலைப்பாட்டை இந்திய மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். உக்ரைன் விவகாரத்துக்காக மட்டுமல்லாமல், ரஷ்ய அதிபர் விளாமிடிர் புடின் (Vladimir Putin) கடந்த 20 வருடங்களாக செய்து வரும் மனிதநேயமற்ற செயல்களுக்காக அந்நாட்டுடனான உறவு குறித்து இந்தியா சிந்திக்க வேண்டும். தனது தவறுக்காக ரஷ்யா இந்தியாவால் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
May03

அமெரிக்கா - வட கொரியா இடையே மோதல் போக்கு இருந்து வருகிற

Feb07


துபாய் சுகாதார ஆணையத்தின் ஆரம்ப சுகாதார நிலைய தலைம

Oct26

சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி பட

Mar21

ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி அரசுக்கும், ஹவுதி கிளர்ச்ச

Feb02

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கோடிக்கணக்கான பெறுமதி

Mar08

உள்ளூர் விலங்கியல் பூங்காவில் ஒரு சிறுத்த

Feb07

ரஷ்ய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையா

Jan17

ஜெர்மனி நாட்டின் பிராங்க்பிரட் நகரில் சர்வதேச விமான ந

Apr01

உலகின் மிகப்பெரிய ஏவுகணை சோதனை என உலக நாடுகளை நம்ப வைத

Aug29

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதை தொடர்ந்து

Mar27

பாகிஸ்தானில் இருந்து வங்காளதேசம், 1971-ம் ஆண்டில் பிரிந்

May19

நாட்டில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது.<

May28