நாட்டில் தற்போது நிலவும் கடும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்கள் கூட தற்போது எரிவாயுவுக்காக வரிசையில் நிற்பதை காணக்கூடிய அளவிற்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வந்துள்ள வெளிநாட்டவர்கள் எரிவாயுவிற்காக வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து புகைப்படங்கள் சமூக ஊடகங்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொரும் மற்றும் எரிவாயுவிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.