More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • மண்டியிட்டு எதையாவது தானமாக பெறும் நாட்டின் அதிபராக நான் இருக்க விரும்பவில்லை- நேட்டோவுக்கு ஜெலன்ஸ்கி பதிலடி!
மண்டியிட்டு எதையாவது தானமாக பெறும் நாட்டின் அதிபராக நான் இருக்க விரும்பவில்லை- நேட்டோவுக்கு ஜெலன்ஸ்கி பதிலடி!
Mar 09
மண்டியிட்டு எதையாவது தானமாக பெறும் நாட்டின் அதிபராக நான் இருக்க விரும்பவில்லை- நேட்டோவுக்கு ஜெலன்ஸ்கி பதிலடி!

நேட்டோவுடன் இணைவதற்கு தான் விரும்பவில்லையென உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு பெரிய அளவில் உதவிகள் எதுவும் செய்யவில்லை. இதனை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளிப்படையாகவே தெரிவித்தார்.



இந்நிலையிலேயே இவ்வாறான அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 



உக்ரைன் நாட்டை நேட்டோ நாடுகள் அமைப்பில் சேர்த்து கொள்ள வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முன்னர் விருப்பம் தெரிவித்திருந்தார்.



அதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. எனவே உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க இதுவும் ஒரு காரணம் எனக் கூறப்பட்டது.



தற்போது போர் 14 நாட்கள் ஆன நிலையில், இது தொடர்பில் ஜெலன்ஸ்கி கருத்துத் தெரிவிக்கையில், 



நேட்டோ நாடுகள் அமைப்பில் சேரவேண்டும் என்று உக்ரைன் விரும்பியது. ஆனால் நேட்டோ, உக்ரைனை ஏற்க விரும்பவில்லை என்பதை இப்போது தான் புரிந்து கொண்டோம்.



எனவே நேட்டோ அமைப்பில் எங்களை உறுப்பினராக சேர்த்து கொள்ளுங்கள் என்ற எங்களின் கோரிக்கைக்கு இனியும் அழுத்தம் கொடுக்க போவதில்லை. இனி நேட்டோ நாடுகள் அமைப்பில் சேரவிரும்ப வில்லை.



மண்டியிட்டு எதையாவது தானமாக பெறும் நாட்டின் அதிபராக இருக்க நான் விரும்பவில்லை. ரஷ்ய அதிபர் புடின், உக்ரைனில் உள்ள 2 பிரிவினைவாத குழுக்களுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கி உள்ளார்.



அந்த குழுக்கள் தொடர்ந்து எங்களுடன் போரிட்டு வருகிறார்கள். அங்கு வசிக்கும் மக்கள் உக்ரைனின் பகுதியாக வாழவே ஆசைப்படுகிறார்கள். ரஷ்யாவை தவிர வேறுயாரும் இக்குழுக்களை அங்கீகரிக்கவில்லை.



அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பு குறித்த உத்தரவாதம் வேண்டும். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் தயாராக உள்ளது. ரஷ்ய அதிபர் புடின் இப்பிரச்சினைகள் குறித்து திறந்த மனதுடன் பேச்சு வார்த்தைக்கு வரவேண்டும்.



ஒக்சிஜன் இல்லாமல் சுவாசிக்க முயற்சிப்பதற்கு பதில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முன்வரவேண்டும். அதற்கான கலந்துரையாடலை அவர் தொடங்க வேண்டும்எனவும் அவர் கூறினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar07

உக்ரைனில் ரஷ்யத் துருப்புகள் கடும் சேதங்களை விளைவித்

Nov08

சீன நாடு தனியாக டியான்காங் என்ற பெயரில் விண்வெளி நிலை

Jun06

  ஏரோஃப்ளோட் விமானம்

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்த

May09

ரஷ்யா உக்ரைன் மக்களின் வாழ்க்கையில் அக்கறை காட்டவில்

May31

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு (Vladimir Putin) புற்று நோய் த

Jul06

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சுலு மாகாணத்தின் ஜோலோ தீவு

Jan23

டொமினிக்கன் குடியரசில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின

Jun09

ஜப்பானில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர் தொடர்பான தகவல

Aug02

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடை

Sep19

தாய்வானின் தென்கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட 6.9 ரிக்டர்

Feb26

உக்ரைன் - ரஷ்யா இடையிலான யுத்த களம் என்பது தற்போது மிகவ

Apr11

 உக்ரைன் மீது ரஷியா படையெடுத்துள்ளது. ரஷியா உடனான இந

Jun22

அமெரிக்க மாகாணத்தை சக்தி வாய்ந்த புயல் புரட்டிப் போட்

Mar09

உக்ரேனில் நடைபெற்று வருகின்ற சண்டைகள் வெறுமனே உக்ரேன