டொன்பாஸில் உள்ள ரஷ்ய ஆதரவு பகுதிகள் மீது இராணுவத் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்ட ஆறு பக்கங்களை கொண்ட ஆவணங்களை அமைச்சு வெளியிட்டுள்ளது.
உக்ரேனிய மொழியில் எழுதப்பட்ட குறித்த ஆவணங்களை மொழிபெயர்க்க முடியவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதனடிப்படையில் கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு இடங்கள் மீது தாக்குதல் நடத்த கீவ் திட்டமிட்டுள்ளதாக இரகசிய ஆவணங்களை மேற்கோள் காட்டி ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு மற்றும் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு ஆகியவற்றை சுதந்திர நாடுகளாக கடந்த மாதம், ரஷ்ய அதிபர் புடின் அறிவித்தார்.
இதனை அடுத்து போர் தொடங்குவதற்கு முன்பு, குறித்த இரண்டு பிராந்தியங்களுக்கும் துருப்புக்களை அனுப்ப புடின் கட்டளையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.