நடிகை ஷாமிலி தனது சகோதரி ஷாலினி மற்றும் அவரது மகள் அனோஷ்காவுடன் எடுத்துக் கொண்ட செம க்யூட்டான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கண்ணாடி அணிந்து கொண்டு அம்மா மற்றும் சித்தியுடன் அனோஷ்கா இருக்கும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
நடிகர் அஜித்தின் குடும்பத்தினர் புகைப்படங்கள் எப்போது சமூக வலைதளங்களில் வெளியானாலும் அது உடனடியாகவே வேறலெவலில் டிரெண்டாகி விடும்.
வலிமை படம் வெளியான நிலையில், அடுத்ததாக ஏகே 61 லுக்கில் நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் எல்லாம் சமீபத்தில் வெளியாகி டிரெண்டாகின.
தற்போது சின்னக் குழந்தையாக இருந்த அனோஷ்கா கிடுகிடுவென வளர்ந்து உள்ள நிலையில், அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.