More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • பாட்டுப்பாடி பிச்சை எடுக்கும் நடிகர்.... பேரதிர்ச்சியில் திரையுலகம்! ஷாக்கில் ரசிகர்கள்
பாட்டுப்பாடி பிச்சை எடுக்கும் நடிகர்.... பேரதிர்ச்சியில் திரையுலகம்! ஷாக்கில் ரசிகர்கள்
Mar 09
பாட்டுப்பாடி பிச்சை எடுக்கும் நடிகர்.... பேரதிர்ச்சியில் திரையுலகம்! ஷாக்கில் ரசிகர்கள்

இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் வெளியான 'குக்கூ திரைப்படத்தில் நடித்த நடிகர் தற்போது வறுமையால் பாட்டுப்பாடி தெருத்தெருவாக யாசகம் எடுக்கும் அதிர்ச்சி தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.



கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான குக்கூ திரைப்படத்தில் தினேஷ் மற்றும் மாளவிகா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.



இந்த படத்தில் இளங்கோவனும் சிறு கதா பாத்திரத்தில் நடித்திருப்பார்.



தற்போது பாட்டு பாடி இளங்கோவன் யாசகம் எடுத்து வரும் சம்பவம், பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.



இது குறித்து பிரபல ஊடகம் ஒன்றுக்கு அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.



அதில் கூறியதாவது, "எனது குடும்பத்தினர் அனைவரும் தஞ்சாவூரில் உள்ளனர்.கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2019 ஆம் ஆண்டு, அனைவரையும் பிரிந்து விட்டு, சென்னை வந்து விட்டேன். வேலை இல்லை என்பதால் என்னை தண்டச்சோறு என பெற்றோர்கள் திட்டிக் கொண்டே இருந்தார்கள்.



இதனால், நான் சண்டை போட்டு விட்டு வந்து விட்டேன்.இப்போது எல்லாம் அம்மாவை பற்றியும் கவலைப்படுவதில்லை. அவர் தான் வேலை இல்லை எனக்கூறி என்னை விரட்டினார்கள். சென்னை வந்த நான் வாடகைக்கு ரூம் எடுத்து தங்கியிருந்தேன். அப்போது, பாடல் பாடி பிழைப்பு நடத்தி வந்தேன்.



ஆனால், கொரோனா தொற்று வந்த பிறகு, ரூமுக்கு வாடகை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், நான் இங்கு வந்து விட்டேன். சாலையோரம் தான் படுத்துக் கொள்கிறேன்" என தன்னுடைய வேதனையான சூழ்நிலையை விளக்கினார். தொடர்ந்து தனக்கு நேரும் துன்புறுத்தல்கள் பற்றி பேசிய அவர், "இங்கே நான் பாடல் பாடும் போது, என்னை கிண்டல் செய்கிறார்கள்.



அடிதடி வரைக்கும் கூட சென்றுள்ளது. எனக்கு கண் தெரியாது என்பதால், இந்த மாதிரி நடந்து கொள்கிறார்கள். எனக்கான வீடு அல்லது அறை இருந்தால் இந்த தொல்லை வராது" எனக் கூறினார்.மேலும், தன்னுடைய கனவு குறித்து பேசிய இளங்கோவன், "தற்போது சுரங்க பாதையில் இருக்கும் நான் அரங்க பாதைக்கு செல்ல வேண்டும். ஒரு வீட்டில் தங்க வேண்டும். அல்லது அறையிலாவது தங்க வேண்டும். மிகப் பெரிய பாடகர் ஆக வேண்டும்" என தெரிவித்துள்ளார். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep23

நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக ப

Apr08

கேரளா மாநிலம் கொச்சியில் பிராந்திய சர்வதேச திரைப்பட வ

May03

கியூட் ஜோடியின் ரம்ஜான் கொண்டாட்டம் 

தமிழ் திரை

Apr27

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகள் சாரா

Mar29

ராஜா ராணி 2

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒள

Sep10

சாமி, சிங்கம், வேல், ஆறு, பூஜை என பல்வேறு கமர்ஷியல் ஹிட்

Mar13