நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாட்டுக்கு முகங்கொடுத்து பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று (08) அரசாங்கத்தின் பின்வரிசை நாடாமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.
எனவே அது தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் அரசாங்கத்தின் பின்வரிசை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.
அரச பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேமநாத் தொலவத்த தவிர்ந்த ஏனைய அனைத்து பின்வரிசை உறுப்பினர்களும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.