அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் 5 வயது சிறுவன் அடித்ததில், கன்கஷன் ஏற்பட்டு ஆசிரியை மயங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் பெம்ப்ரோக் பைன்ஸ் நகரில் இருக்கும் போலீசாருக்கு கடந்த வாரம் அவசர அழைப்பு ஒன்று வந்துள்ளது, அதைக் கேட்டு போலீசார் முதலில் அதிர்ச்சி அடைந்தனர்.
அமெரிக்காவில் பெம்ப்ரோக் பைன்ஸ் பகுதியில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளியில் சுமார் 800 மாணவர்கள் படித்து வருகிறார்கள். திடீரென்று போலீசாருக்கு அப்பள்ளியிலிருந்து அழைப்பு வந்தது.
ஆசிரியர் ஒருவர் சுவற்றில் சாய்ந்து மூச்சு இல்லாமல் மயங்கி உள்ளார் என்று. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஆசிரியரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் ஆசிரியருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, விசாரணையில், பள்ளியில் உள்ள 5 வயது சிறுவன் தாக்கியதில், ஆசிரியை கன்கஷன் ஏற்பட்டு மயங்கியது தெரிய வந்தது. இந்த பள்ளி மாற்றுத்திறனாளிகள் படிக்கும் பள்ளி. கடந்த வாரம் பள்ளியில் 2 மாணவர்கள் ஒருவரையொருவர் பொருட்களை கொண்டு தாக்கிக்கொண்டனர்.
அப்போது, ஆசிரியர் அவர்களை சமாதானப்படுத்தி வெளியே கூட்டிக்கொண்டு வந்துள்ளார். அப்போது அந்த 5 வயது சிறுவன், ஆசிரியரை கையால் பயங்கரமாக தாக்கியதாகவும், அதில் எதிர்பாராத விதமாக அந்த ஆசிரியருக்கு கன்கஷன் ஏற்பட்டு, அவர் மயக்கம் அடைந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
மேலும், மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், தாக்கிய மாணவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏனென்றால் மாற்றுத்திறனாளி பள்ளி என்பதால் போலீசார் விசாரணை மட்டும் நடத்தியுள்ளனர்.