உக்ரைனுக்கு எதிரான படையெடுப்பில், பொதுமக்களையும் ரஷ்ய துருப்புகள் குறிவைப்பதாக, நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் (Jens Stoltenberg) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, நம்பத்தகுந்த தகவல்கள் தனக்குக் கிடைத்துள்ளதாக ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் தெரிவித்துள்ளார். ரஷ்யா தாக்குதலை நிறுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த போரை பரப்புவதற்கு தான் அனுமதிக்க மாட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். “உக்ரைனுக்கு வெளியே இந்த போர் பரவாமல் தடுப்பது நம் கடமை. எங்களின் கூட்டணி நாடுகளின் நிலத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் நாங்கள் பாதுகாப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய தாக்குதல் பொதுமக்களுக்கு மோசமான அழிவுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்த போரின் மனிதநேய விளைவுகள் பேரழிவுகளை ஏற்படுத்தும் எனவும், லாட்வியன் அதிபர் ஈகில்ஸ் லெவிட்ஸுடனான அறிக்கையில் தெரிவித்துள்ளார்.