More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • மன்கட்” விதிமுறையில் மாற்றம்.. கிரிக்கெட்டின் முக்கிய முறைகள் மாற்றம்.. அஸ்வினுக்கு கிடைத்த வெற்றி!
மன்கட்” விதிமுறையில் மாற்றம்.. கிரிக்கெட்டின் முக்கிய முறைகள் மாற்றம்.. அஸ்வினுக்கு கிடைத்த வெற்றி!
Mar 09
மன்கட்” விதிமுறையில் மாற்றம்.. கிரிக்கெட்டின் முக்கிய முறைகள் மாற்றம்.. அஸ்வினுக்கு கிடைத்த வெற்றி!

கிரிக்கெட்டில் இனி மன்கட் ரன் அவுட் என்பதை அதிகாரப்பூர்வமாக்குவது உள்ளிட்ட பல விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளது.



கிரிக்கெட் போட்டிகளின் விதிமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வருவது, புதிய விதிமுறை உருவாக்குவது போன்ற கமிட்டியாக எம்சிசி உள்ளது.



இனி விக்கெட்டுகள் மூலமாக எந்தவொரு சர்ச்சைகளும் ஏற்படாமல் இருப்பதை தடுக்க புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்துள்ளது.அதாவது, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஐபிஎல் தொடரில் ஜாஸ் பட்லரை - அஸ்வின் மன்கட் என்ற முறையில் அவுட்டாக்கினார். இது விளையாட்டு முறைகளுக்கு எதிரானது எனக்கூறி அஸ்வின் மீது பல விமர்சனங்கள் குவிந்தன. நான் ஸ்டரைக்கர் எண்டில் உள்ள பேட்ஸ்மேன் பந்துவீசுவதற்கு முன்னதாக கிரீஸை விட்டு வெளியேறினால் ரன் அவுட்டாக்கலாம் என்பது நியாயமான ஒன்று தான் என ஐசிசி அமைதி காத்தது. எனினும் இதனால் சர்ச்சைகள் ஏற்படுகிறது என எந்த வீரர்களும் முயற்சி செய்து பார்க்காமல் உள்ளனர்.



இந்நிலையில் "மன்கட்" அதிகாரப்பூர்வமான ரன் அவுட்டாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இனி யாரும் இதனை நியாயமற்ற செயல், ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் கிடையாது எனக்கூற முடியாது எனவும் எம்சிசி தெரிவித்துள்ளது. வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



இதே போல பந்தில் எச்சில் தடுவுவதும் நிரந்தரமாக தடைசெய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீரர்கள், பந்தில் எச்சிலை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டது. ஆனால் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இனி நிரந்தரமாக தடைவிதிக்கப்படுகிறது. இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில், பந்தில் எச்சில் தடவினால் ஸ்விங் ஏற்பட பவுலர்களுக்கு உதவும். ஆனால் பெரிய மாற்றம் ஒன்றும் தெரியவில்லை என்பதால் புதிய விதிமுறை வந்துள்ளது.



டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் முதல் தான் தொடங்கவுள்ளது. எனவே அதற்கு மட்டும் ஐசிசி நடப்பு விதிமுறைகளை பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் எம்சிசி பரிந்துரைத்துள்ளது. மன்கட் விதிமுறை நியாயமான ஒன்று தான் என்ற அஸ்வினின் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது.



 





வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct10

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்ட

Aug18

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்

Aug25

வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் இடையிலான இரண்டாவது டெஸ்ட்

Jul15

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும்

May04

நடப்பு ஐபிஎல் சீசனின் ஐபிஎல் பிளே ஆஃப் குறித்து முக்

Oct18

ரியல் மெட்ரிட் முன்கள வீரர் கரீம் பென்சிமா தனது வாழ்க

Jun29

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் கோபன்ஹே

Jan17

இந்திய அணியுடனான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின்

Sep17

சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரான சென்னை ஓபன் ஒற்றையர் ப

Dec22

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் விஜய் ஹசாரே கோப்பை கிரி

Oct22

உலகக்கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டித் தொடர

Feb13

ஐ.பி.எல். போட்டியில் கடந்த முறை டெல்லி கேப்பிட்டல்ஸ் அண

Sep22

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இர

Sep10

இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடை

Oct25

ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர்-12 சுற்றுக்கு முன்னேற