More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • தொலைபேசி  பணப்பரிமாற்றம் - இணைய வசதி தேவையில்லை!
 தொலைபேசி  பணப்பரிமாற்றம் - இணைய வசதி தேவையில்லை!
Mar 09
தொலைபேசி  பணப்பரிமாற்றம் - இணைய வசதி தேவையில்லை!



சாதாரண செல்போன்களிலும் கூட இனிமேல் பண பரிவர்த்தனை செய்வதற்கான. 'யுபிஐ-123 பே' சேவையை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிமுகப்படுத்தினார். ஸ்மார்ட்போன் ஸ்கேன் அண்ட் பே செய்யப்படும் அனைத்து இடங்களிலும் சாதாரண  தொலைபேசி  வைத்துள்ளவர்கள் பரிவர்த்தனை செய்ய முடியும். இந்தச் சேவையைப் பயன்படுத்த இன்டர்நெட் இணைப்பு தேவையில்லை.இந்தியாவில் ஆண்ட்ராய்டு செல்போன்களில் வங்கிப் பணி பரிமாற்றம் எளிதாக நடக்கிறது. ஆனால், இந்த வகை செல்போன்களை வாங்க முடியாத சாதாரண மக்களால்,



இந்த டிஜிட்டல் நவீன மயத்தில் பங்கேற்க முடியவில்லை.இதனால், சாதாரண செல்போன்களை வைத்துள்ள சாதாரண மக்களும் பயன்படுத்தும் வகையிலான யுபிஐ டிஜிட்டல் நிதி சேவை விரைவில் வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார்.இந்த சேவை மூலம் சாதாரண செல்போன்கள் வைத்துள்ளவர்களும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளில் பங்கேற்க முடியும் என்று சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.



சாதாரண செல்போன் வைத்துள்ள வாடிக்கையாளர்கள், தங்களது வங்கி கணக்குடன் முன்கூட்டியே இந்த யுபிஐ-123 பே சேவையைப் பயன்படுத்த இணைத்திருந்தால் மட்டும் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கிராம புறங்களில் உள்ளவர்களுக்கும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் டிஜிட்டல் பரிமாற்றத்துக்கான 24 மணி நேர ஹெல்ப்லைன் எண்ணையும் தொடங்கி வைத்தார். இதற்கு டிஜிசாதி எனப் பெயரிடப்பட்டு உள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May01

கொரோனா நேரத்தில் உயிர்காக்கப் போராடும் முன்களப் பணிய

Sep26

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்

May21

தமிழ்நாட்டில் BA.4 கொரோனா என்ற புதியவகை கொரோனா தொற்று பா

Apr01

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக

Sep08

மதுபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்த பெண், கொ

Mar08

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பஞ்சாயத்து யூனியனுக்

Apr13

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சாட்சியம் அளிக்க உத்தரவிடக்

May05

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தாக்கத்தால

Mar09

இந்தியாவில் 2020-ம் ஆண்டில் கொரோனா தொற்று பாதிப்பு தொடங

Aug20

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு

Oct24