இணைய வழித் தாக்குதலில் ரஷ்யா ஈடுபடலாம் என்பதால் அமெரிக்காவின் நியூயோர்க்கிற்கு அதி உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையில் பதற்றங்கள் அதிகரிக்கும் போது சைபர் தாக்குதல்களுக்கான அச்சுறுத்தலும் அதிகரிப்பதாக நியூயோர்க் நகர காவல் துணை ஆணையர் ஜான் மில்லர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் முடிவானது, சைபர் தாக்குதல்களை எதிர்நோக்க வேண்டிய அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதனால்தான் உயர் எச்சரிக்கையில் இருந்து அதி உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜான் மில்லர் கூறியுள்ளார்.