பாலிவுட் சினிமாவில் ஏகப்பட்ட பாடல்கள் பாடி மக்களின் மனதில் பெரிய இடத்தை பிடித்திருப்பவர் பாடகி லதா. இவருக்கு கடந்த ஜனவரி 8ம் தேதி கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
உடனே அவரது வீட்டின் அருகில் உள்ள Breach Candy மருத்துவமனையில் ICUவில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று மருத்துவமனையில் இருந்து வந்த தகவல் என்னவென்றால், பாடகி லதா இப்போதும் தீவிர சிகிச்சை பிரிவில் தான் இருப்பதாகவும் அவருக்கு சில முன்னேற்றங்கள் காணப்படுவதாகவும் கூறியிருந்தனர்.
இதனால் ரசிகர்கள் பாடகி சீக்கிரம் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் பிராத்தனை செய்து வந்தனர். ஆனால் இன்று பாடகி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.