நாட்டில் எந்த தேர்தலை நடத்தினாலும் அரசாங்கம் படுதோல்வியைத் தழுவும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டில் கூடிய விரைவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்திக் காட்டுமாறு அராசங்கத்திற்கு சவால் விடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஞாயிறு பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேர்தல் நடத்தப்பட்டால் தோல்வியைத் தழுவ நேரிடும் என்ற காரணத்தினால் அரசாங்கம் தொடர்ச்சியாக தேர்தல்களை ஒத்தி வைத்து வருகின்றது.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டி, பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுக் கொண்டாலும் தற்பொழுது மக்களுக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லை.
ஆளும் கட்சியில் இருப்பவர்களுக்கே இந்த விடயங்கள் புரிந்து விட்டன என அவர் குறிப்பிட்டுள்ளார்.