More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ஆழ்துளை கிணற்றுக்குள் 4 நாட்களாக சிக்கி தவித்த சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!
ஆழ்துளை கிணற்றுக்குள் 4 நாட்களாக சிக்கி தவித்த சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!
Feb 06
ஆழ்துளை கிணற்றுக்குள் 4 நாட்களாக சிக்கி தவித்த சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!

மொராக்கோ நாட்டில் 4 நாட்களாக கிணற்றில் சிக்கிய சிறுவன் மீட்பு பணியின் முடிவில் உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



மொராக்கோவில் 100 அடி கிணற்றுக்குள் விழுந்த 5 வயது சிறுவனை காப்பாற்ற கிட்டத்தட்ட 4 நாட்களாக மீட்புக்குழுவினர் போராடி வந்த நிலையில்,மீட்பு பணியின் முடிவில் சிறுவன் உயிரிழந்துள்ளார்.



ஆப்பிரிக்கா நாடான மொராக்கோவில் Chefchaouen மாநிலத்தில் 5 வயது சிறுவன் பெயர் Rayan கடத்த செவ்வாக்கிழமை மாலை நேரத்தில் 100 அடி (30 மீட்டர்) ஆழமுள்ள ஒரு ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார்.



குழந்தை அழும் குரல் கேட்டதையடுத்து, கிணற்றுக்குள் சிறுவன் விழுந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த மொராக்கோ மீட்புக் குழுவினர் புதன், வியாழன் என 48 மணிநேரங்களுக்கும் மேலாக சிறுவனை செங்குத்தாக மீட்க முயற்சித்தனர்.



கிணறு 32 மீட்டர் ஆழம் கொண்டது மற்றும் மேலே 45cm (18 அங்குலம்) விட்டத்தில் இருக்கும் அந்த கிணறு கீழே இறங்க இறங்க சுருங்கியுள்ளதாகவும், அதன் காரணமாக குழந்தையை மீட்க மீட்பவர்கள் கீழே செல்ல முடியாது என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.



அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததால், இன்று கிணற்றின் பக்கவாட்டில் பிரம்மாண்ட இயந்திரங்களைக் கொண்டு, நேராக சிறுவன் இருக்கும் தூரம் வரை பாரிய பள்ளத்தை தோண்டி வருகின்றனர். தற்போதைய நிலையில், பக்கவாட்டில் கிணறு தோன்றும் திட்டத்தின்படி, கிட்டத்தட்ட சிறுவனை நெருங்கி சென்றிருந்தனர்.



கிணற்றின் வாய் பகுதி ஒன்றரை அடி விட்டமே கொண்டிருந்தமை மீட்பு பணியில் சிரமத்தை ஏற்படுத்தியிருந்ததுடன், அதிகாரிகள் இயந்திரங்களை கொண்டு மீட்பு பணியை தொடர்ந்திருந்தனர்.



இதனை தொடர்ந்து சிறுவனுக்கு கயிறு வழியே உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டதுடன்,  கடந்த 4 நாட்களாக நடந்த மீட்பு பணியின் முடிவில் சிறுவனை வெளியே கொண்டு வந்திருந்தனர்.



எனினும், குறித்த சிறுவன் உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



GalleryGalleryGallery






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep21

ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அணிதிரட்டல் உத்தரவுக

Mar03

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், மஜு வர்க்கீஸ். இவர், அம

May09

உக்ரைனில் பொதுமக்கள் பதுங்கியிருந்த பாடசாலை ஒன்றில்

Jul06

அமெரிக்காவில் சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதி

Mar08

உக்ரைன் - ரஷ்யா இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், தல

Jan26

அவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தட

Oct13

வெனிசுவேலாவில் இருந்து புலம்பெயர்ந்தோரை அமெரிக்காவி

Mar08

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல்-

May17

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கடந்த வியாழக்கிழம

Mar16

ரஷ்ய - உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யா

Mar06

உக்ரைனுக்குள் ஊடுருவியதால் பல குடும்பங்களின் பிரிவு

Feb04

பிரித்தானியாவில் பத்து மில்லியன் மக்கள் தற்போது கொரோ

Mar21

 உலகம் முழுவதும் பிரபலமான சமூக வலைதள நிறுவனமான ட்விட

Feb14

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் கானேவால் மாவட்டத்தில

May13

கொரோனா விவகாரத்தில் இந்தியாவுடன் நெருங்கி பணியாற்றி