More forecasts: 30 day weather Orlando

சிறப்பு பார்வை

  • All News
  • நீதித்துறையில் 25 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் முதல் தமிழ் நீதிபதி
நீதித்துறையில் 25 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் முதல் தமிழ் நீதிபதி
Feb 05
நீதித்துறையில் 25 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் முதல் தமிழ் நீதிபதி

இன்றைய இலங்கை நீதிபதிகளின் வெள்ளி விழா பூர்த்தி செய்யும் முதல் தமிழ் நீதிபதியாக நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் 25 ஆண்டுகளை பூர்த்தி செய்கிறார்.



05.02.1997 நீதிபதியாக நியமனம் பெற்று வவுனியாவில் தனது முதல் நியமனத்தை நீதவானாக ஆரம்பித்து 05.02.2022 அதே வவுனியாவில் மேல் நீதிமன்ற நீதிபதியாக 25 ஆண்டுகள் பூர்த்தி செய்யும் முதல் தமிழ் நீதிபதி என்ற பெருமைக்குரியவர் ஆகின்றார்.



இன்றைய வடக்கு - கிழக்கு மாகாண அனைத்து நீதிபதிகளிலும் 25ஆண்டுகளை பூர்த்தி செய்யும் முதல் பெருமைக்குரிய தமிழ் நீதிபதியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.




  • 1999 யாழ். செம்மணி புதைகுழி வழக்கு,

  • 1999 மன்னாரில் காமாலிக்கா கொலை வழக்கு, மடு தேவாலய குண்டு வெடிப்பு வழக்கு, மற்றும் லயன் எயார் குண்டு வெடிப்பு வழக்கு

  • 2000 - 2008 ஒன்பது ஆண்டுகள் கடுமையான யுத்தம் நிலவிய காலப்பகுதியில் வவுனியாவில் நீதிபதியாக கடமையாற்றியமை. ஜெயசிக்குறு தாக்குதல் காலம், யுத்த நிறுத்த காலம், மீண்டும் இறுதி யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட யுத்த காலத்தில் வவுனியா நீதிபதியாக கடமையாற்றினார்.

  • 2006 வவுனியா விவசாயக் கல்லூரி மாணவர்கள் கொலை வழக்கு

  • 2008 மேல் நீதிமன்ற ஆணையாளராக நியமிக்கப்பட்டமை

  • 2009 இல் திருகோணமலை கோயில் குருக்கள் மனைவி கொலை வழக்கில் மரண தண்டனை வழங்கியமை, அந்த கொலை வழக்கு தீர்ப்பு உயர் நீதிமன்றம் வரை சென்று தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்டமை.

  • 2014 கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் 

  • 2015 கணவர் கொலை கொலை வழக்கில் இஸ்லாமிய பெண்ணிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை, தீர்ப்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டமை.

  • 2015 யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெற்று மூவர் அடங்கிய தீர்ப்பாயத்தில் 1 நீதிபதியாக வித்தியா கொலை வழக்கில் தனித் தீர்ப்பு எழுதி மரண தண்டனை விதித்தமை.

  • 2018இல் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் பெற்று யாழ். இளைஞன் கொலை வழக்கில் இரு இராணுவ அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்தமை.

  • 2022இல் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டு, தயா மாஸ்டர் வழக்கில் இரு வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கி விடுதலை செய்தமை உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை.



25 வருட காலப் பகுதியில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன்  மேற்குறித்த முக்கிய வழக்குகளுக்கான தீர்ப்புக்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan24

பல வருட சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலையாகும் முன்னாள

Jan23

இலங்கையில் வாழ் யுவதிகள் இருவர் சாதனை படைத்துள்ளனர்.

Feb06

உலக பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை சிறப்

Jan24

சுவிற்சர்லாந்து நாட்டின் சொலோர்த்தூன் திரைப்படவிழாவ

Mar03

 

உச்சியில் கதிரவன் காட்சி கொடுக்கின்றான். வீதிய

Mar05

உர இறக்குமதியில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு கொம

Mar04

துபாயில்  9 ஆண்டுகளுக்குப் முன் கணவனை இழந்த பெண்  தன

Jan24

நாடுகடத்தலுக்கு எதிராக சட்டப் போராட்டத்தை முன்னெடுத

May25

நேபாளத்தைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் ஒருவர் உலகின் மிக க

Mar05

இன்டெல் கார்ப்பரேஷன், ஹெச் பி நிறுவனம், ஆப்பிள் மற்றும

Feb05

இன்றைய இலங்கை நீதிபதிகளின் வெள்ளி விழா பூர்த்தி செய்ய

Feb11

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மிகவும் பிரபலமா

Jan27

 இலங்கையிலுள்ள அழகுக்கலை நிபுணர்கள் 500 பேருக்கு லண்ட

Jan28

இலங்கையின் பாடகி யோஹானி டி சில்வா (Yohani de Silva) பாடிய “மெனி

Jan29

சர்வதேச சந்தை முதல், இந்திய சந்தை வரையில் தங்கத்தின் வ