யாழ்.கோப்பாய் - இராசபாதை வீதியில் அதிகாலையில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டுவந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவரை கைது செய்ய பொலிஸார் துரித நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.
அதிகாலை வேளையில் இராசபாதை வீதியூடாக செல்லும் விவசாயிகள், சந்தை வர்த்தகர்கள், வேலைக்கு செல்லும் பெண்களை இலக்குவைத்து வழிப்பறி கொள்ளை இடம்பெற்றுவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸரிடம் முறையிடப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வழிப்பறி கொள்ளை சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிப்படையில் மேலும் ஒருவரை கைது செய்வதற்கு பொலிசார் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.