இலங்கையின் சுதந்திர தினத்திற்கு அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் அந்தனி பிலிங்கன் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டின் 74ம் சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் இவ்வாறு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் மிக நீண்ட கால நட்புறவு காணப்படுவதாக தெரிவித்துள்ளார். பேண்தகு பொருளாதார அபிவிருத்தி, பெண்கள் மற்றும் சிறு வியாபாரங்களுக்கு உதவியளித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் இலங்கைக்கு உதவிகளை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கோவிட் பெருந்தொற்று கட்டுப்பாடுகளிலும் இலங்கைக்கு அமெரிக்கா பல்வேறு வழிகளில் உதவிகளை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாடுகளின் அரசாங்கங்களும் சமூகங்களும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் சுபீட்சத்தையும் பாதுகாப்பினையும் மேம்படுத்திக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.