More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • நாடளாவிய ரீதியில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்! பாதுகாப்பு தீவிரம்
நாடளாவிய ரீதியில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்! பாதுகாப்பு தீவிரம்
Feb 04
நாடளாவிய ரீதியில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்! பாதுகாப்பு தீவிரம்

இலங்கையின் 74வது சுதந்திர தின கொண்டாட்டத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



இதற்கமைய,கொழும்பின் பல பகுதிகளில் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கைகளிலும்,ரோந்து நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.



இன்றை தினம் இடம்பெறவுள்ள 74வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் பாதுகாப்பிற்காக 3000 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



பொலிஸார், விசேட அதிரடிப்படை மற்றும் ஆயுதப்படையினரின் உதவியுடன் பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு கொழும்பு மாநகரம் மற்றும் மேல் மாகாணத்தை உள்ளடக்கிய வகையில் விசேட பாதுகாப்பு திட்டமொன்றும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.



இதேவேளை, இன்றைய தினம் பெப்ரவரி 04ம் திகதி 21 வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் எனவும், பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் அந்த வீதிகளுக்கு மாற்றுப் பாதைகளை பயன்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.



இதேவேளை, 74 வது சுதந்திர தின அணிவகுப்பை முன்னிட்டு இவ்வருடம் கடற்படையினரின் 25 சல்யூட் ஷாட்கள் மற்றும் விமானப்படையினரால் விமானக் கண்காட்சி நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.



இதன்படி, விழா நடைபெறும் நாடு சார்பில் காலி முகத்திடலில் இருந்து இலங்கை கஜபாகு கப்பலில் இருந்து 25 சல்யூட் ஷாட்கள் வழங்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதுடன், முப்படைகளுடன் காலாட்படை இணைந்து 26 விமானங்கள் மற்றும் 50 விமானிகளின் அணிவகுப்பு வான்வெளியில் காட்சியளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb25

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் சிறப்பு

Aug06

முள்ளியவளையில் நகர் பகுதியில் விபத்தினை ஏற்படுத்திய

Oct16

மட்டகளப்பில் நேற்று மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை அட

Sep13

வடமாகாணத்தில் தற்போது 30 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கான

Oct24

காணாமல் போன பிள்ளைகளுக்கு தீர்வு கிடைக்காமல் தமக்கு த

Sep26

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வாரத்திற்கு ஒரு மு

Mar11

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு வெளிந

Feb01

வவுனியா- செட்டிகுளம் நகர்பகுதியில் இடம்பெற்ற விபத்தி

Mar23

ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்கும், அச்சுறுத்தல் விடுக

Feb07

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்

Mar30

அடுத்த வாரம் முதல் பேருந்து சேவைகள் நிறுத்தப்படும் என

Jul16

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந

Sep20

ஓமான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளர்க

Mar15

பாடசாலை மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி  பால

Dec17

துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விட