மத்திய மலை நாட்டிலுள்ள விக்டோரியா உட்பட பல முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் சடுதியாக குறைவடைந்துள்ளது.
மகாவலி ஆறு, ஹுலு ஆறு மற்றும் கல் மல் ஓயா ஆகியவற்றின் நீர் மட்டம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய மலை நாட்டில் நிலவும் கடும் வறட்சி மற்றும் மழையற்ற காலநிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் மின்வெட்டு மட்டுமின்றி, குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும் அபாயமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.