இன்று அநேகரின் வீட்டில் செல்லப்பிராணியாக நாய், பூனை இவற்றினை வளர்த்து வருகின்றனர். இவ்வாறு வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளும் வீட்டில் ஒருவர் போன்றே செயல்படுகின்றது. அவ்வாறான நாய்கள் குறித்து பலருக்கும் தெரியாத சில சுவாரசியமான விடயத்தினை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
நாய்கள் அதிகமாக 10 முதல் 14 ஆண்டுகள் வாழக்கூடியது.
இவ்வுலகில் சுமார் 400 மில்லியன் நாய்கள் உள்ளன.
நாய்களால் 200 வார்த்தைகளின் சைகைகளை புரிந்துகொள்ள முடியும்.
நாய்களால் மனிதனின் முகத்தை வைத்தே அவர்கள் எந்த மன நிலைமையில் இருக்கிறார்கள் என்று புரிந்துக் கொள்ள முடியும்.
நாய்களால் சுமார் 16 கிலோமீற்றர் வேகத்தில் தொடர்ந்து ஓட முடியும்.
நாய்கள் வளர்ப்பதினால் அதிக அளவு இரத்த அழுத்தம், மன அழுத்தம் குறைவதாக ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக நாய்களும், பூனைகளும் எதிரிகள் என்று பலரும் நினைப்பதுண்டு.... ஆனால் அவைகள் அதிகமாக நட்பாகவே இருக்கும்.