பிக்பாஸ் அல்டிமேட் ஷோவில் வைல்கார்டு என்ட்ரியாக வரப்போகும் போட்டியாளர் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் வைல்கார்டு என்ட்ரியாக நடிகை ஓவியா தான் உள்ளே வர போகிறாராம்.
விரைவில் வைல்கார்டு என்ட்ரி நடைபெற உள்ளதாம். 14 பேர் கொண்ட போட்டியாளர்கள் பட்டியலில் ஓவியா இடம்பெறாததால் ரசிகர்கள் பலர் ஏமாற்றம் தெரிவித்திருந்ததால் அவர்களை குஷிப்படுத்த தான் வைல்கார்டு என்ட்ரியாக ஓவியாவை உள்ளே கொண்டு வர போகிறார்களாம்.
பிக்பாஸ் முதல் சீசனில் வந்த ஓவியா, அனைத்து சீசன்களிலும் பாப்புலரான போட்டியாளராக இருந்து வருகிறார்கள். சோஷியல் மீடியாவில் முதல் முறையாக ஆர்மி துவங்கப்பட்டதே ஓவியாவிற்கு தான்.
முதல் சீசனிலேயே இவர் டைட்டில் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டார். அந்த அளவிற்கு இவரின் நேர்மையான விளையாட்டு அனைவரையும் கவர்ந்தது. ஆனால் முதல் சீசனில் பாதியில் வெளியேறிய ஓவியா, தற்போது அல்டிமேட்டில் என்ட்ரி கொடுக்க போகிறாராம்.