பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு நடிகர் ரஜினி போன் செய்து பாராட்டியுள்ள சம்பவம் ரசிகர்களிடையே இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
அண்ணாத்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி ஓய்வில் இருந்து வரும் நிலையில் தன் அடுத்த படத்திற்கான கதையை பல இயக்குநர்களிடம் கேட்டுவருகிறார். வெங்கட் பிரபு, நெல்சன், தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்புராஜ் போன்ற இயக்குநர்கள் அவருக்கு கதை சொல்லியதாக கூறப்படுகிறது.
அதேசமயம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அனைத்து மொழி படங்களையும் பார்க்கும் நடிகர் ரஜினி அதுதொடர்பாக சம்பந்த படக்குழுவினரை அழைத்து பாராட்டுவதையும் தவறவில்லை.அந்த வகையில் ரஜினி சமீபத்தில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், மீனா, கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற “ப்ரோ டாடி” படத்தைப் பார்த்ததாகவும், இதுதொடர்பாக மோகன்லாலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெகுவாக பாராட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் ரஜினி ப்ரோ டாடி படத்தை தமிழில் ரீமேக் செய்து நடித்தால் சூப்பராக இருக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர்.