சென்னை: நீட் விலக்கு மசோதாவைத் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வெள்ளிக்கிழமை நேரில் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு தர வேண்டும் என்று இங்குள்ள அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வருகிறது. அதிமுக ஆட்சியிலேயே இது தொடர்பாகச் சட்ட மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இருப்பினும், அதற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் தரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.