More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மொரட்டுவ பல்கலைக்கழக மருத்துவ பீடம் நிர்மாணிக்க குவைத் ரூ.6600 மில். கடனுதவி
மொரட்டுவ பல்கலைக்கழக மருத்துவ பீடம் நிர்மாணிக்க குவைத் ரூ.6600 மில். கடனுதவி
Feb 04
மொரட்டுவ பல்கலைக்கழக மருத்துவ பீடம் நிர்மாணிக்க குவைத் ரூ.6600 மில். கடனுதவி

மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிர்மாணிப்பதற்கும் உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்கும் 10 மில்லியன் குவைத் தினார்களை (6,600 மில்லியன் ரூபா) கடனுதவியாக வழங்க குவைத் முன்வந்துள்ளது. பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியம் இந்த நிதியை வழங்கவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.



இந்த மருத்துவ பீடம் களுத்துறை போதான வைத்தியசாலையை அண்டியதாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதோடு இந்தத் திட்டத்தின் கீழ் மருத்துவ பீட புதிய கட்டிடம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் கல்விசார் தளபாடங்கள் மருத்துவ பீட உபகரணங்கள் மற்றும் பொருட்கள் கொள்வனவு செய்யப்படும். 2022 தொடக்கம் 2026 காலப்பகுதியில் கல்வி அமைச்சினால் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படும். இந்த நிதி உதவி தொடர்பான ஒப்பந்தம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் குவைத் தூதுவர் காலாப் டேர் ஆகியோரின் பங்களிப்புடன் கையெழுத்திடப்பட்டது. நிதி அமைச்சு சார்பில் அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவும் குவைத் நிதியம் சார்பில் அதன் பிரதிப் பணிப்பாளர் டெனால் ஒலாயானும் கைச்சாத்திட்டனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep13

தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்ட ஆகஸ்ட் மாத

Jan29

கோவிட் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் பெண்ணொர

May26

பருத்தித்துறை தும்பளையில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒ

Mar12

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத

Jan16

கொழும்பில் உள்ள அடுக்கு மாடி கட்டிடத்தில் இருந்து குத

Oct25

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பகடி வதை மற்றும் துன்புற

Sep06

நாடு தற்போது எதிர்க் கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு க

Feb06

சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடொன்றுக்கு செல்ல முற்பட்ட இள

Mar06

இலங்கை விமானப்படையின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஏ

Apr16

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி கல்வயலைச் சேர்ந்த 59 வயதுடைய

Feb06

வெல்லவாய  எல்லவல நீழ்வீழ்ச்சியில் குளிப்பதற்காக செ

Feb02

நுவரெலியாவில் இளம் யுவதியின் விபரீத முடிவு காரணமாக பெ

Mar07

கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் துப்பாக்கி சூட்டு

May30

நோயாளி ஒருவரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கு மு

Jun12

 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில்