More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • உள்நாட்டில் கார் தயாரித்து அதில் பயணிப்பதே பெருமை இறக்குமதியில் பருப்புக்கே முக்கியத்துவம் - பசில் ராஜபக்
உள்நாட்டில் கார் தயாரித்து அதில் பயணிப்பதே பெருமை இறக்குமதியில் பருப்புக்கே முக்கியத்துவம் - பசில் ராஜபக்
Feb 04
உள்நாட்டில் கார் தயாரித்து அதில் பயணிப்பதே பெருமை இறக்குமதியில் பருப்புக்கே முக்கியத்துவம் - பசில் ராஜபக்

இலங்கையில் கார் உற்பத்தி செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென்பதுடன் எமது நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட காரில் பயணிப்பது பெருமையானதென நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.



கொழும்பில் நடைபெற்ற ஊடக மாநாட்டில், வாகன இறக்குமதியை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் நிதி அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளிக்கும் போதே நிதி அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார். வாகனங்களை இறக்குதி செய்வதற்கு முன்னர் நாட்டுக்குத் தேவையான பருப்பு இறக்குமதி செய்வது முக்கியமானது. நாளை காலைக்குள் பருப்பு கொள்கலன்களை எப்படி கொண்டு வருவது என்று பார்க்க வேண்டியுள்ளது. எப்படியாவது எமது நாட்டில் கார் ஒன்றை உருவாக்குவோம்.





வாகனங்களை ஒன்றிணைக்கும் 5 நிறுவனங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணிப்பது எவ்வளவு பெருமையான விடயம்.1960 களில் எமது நாட்டில் கார் தயாரிக்கப்பட்டது.



இதுவரை இறக்குமதி செய்யப்பட்ட பல பொருட்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. விவசாய பொருட்கள், டின்மீன், பல்வேறு கைத்தொழில் மூலப் பொருட்கள் தற்பொழுது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அயல்நாடுகளில் கடன் பெறுவதை விட எமது சொந்தக் காலில் எழுந்து நிற்க உறுதி பூண வேண்டும். அதற்கான அடித்தளம் இடப்பட்டுள்ளதென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May15

இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட அவரத

Feb02

ஒவ்வொரு கிராமத்தையும் உள்ளடக்கும் வகையில் பொதுமக்கள

Sep15

எதிர்காலத்தில் அவசர சத்திரசிகிச்சைகளிற்கு தேவையான ம

Jan26

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக குற்

Oct15

அமெரிக்காவிற்கு பயணிக்க மோசடி செய்பவர்களால் விளம்பர

Jul27

24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்

May01

ஐக்கிய மக்கள் சக்கியினரின் ஆர்ப்பாட்ட பேரணியானது தற்

Oct15

வரக்காபொல – தும்பிலியத்த பகுதியில் உள்ள வீடொன்றின்

Oct04

உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்வதற்

Oct16

பயங்கரவாத செயற்பாடுகள் ஊடாக அல்லாமல் ஜனநாயக வழியிலேய

Mar05

மாத்தறையிலுள்ள பரேவி துவா விகாரையுடன் நிலப்பகுதியை இ

Apr06

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள வெவ்வேறு பி

May13

புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைக்கப்பட

Jul06

வவுனியாவில் 22 வயதுடைய இளம் குடும்ப பெண் ஒருவரை காணவில்

Sep26

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வாரத்திற்கு ஒரு மு