More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • 197 கைதிகளுக்கு பொது மன்னிப்பு! தொடர்பில் அறிவிப்பு வெளியானது....
 197 கைதிகளுக்கு பொது மன்னிப்பு! தொடர்பில் அறிவிப்பு வெளியானது....
Feb 03
197 கைதிகளுக்கு பொது மன்னிப்பு! தொடர்பில் அறிவிப்பு வெளியானது....



சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் 197 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.



நாளை (04) கொண்டாடப்படவுள்ள 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதிகளுக்கு விடுதலை வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க குறிப்பிட்டார்.



அதற்கமைய, மஹர சிறைச்சாலையில் 20 கைதிகளும் கேகாலை சிறைச்சாலையில் 18 கைதிகளும் வெலிக்கடை சிறைச்சாலையில் 17 கைதிகளும் களுத்தறை சிறைச்சாலையில் 13 கைதிகளும் நாளை (04) விடுதலை செய்யப்படவுள்ளனர்.



போகம்பறை மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலைகளிலிருந்து தலா 11 கைதிகளும் வாரியபொல சிறைச்சாலையிலிருந்து 10 கைதிகளும் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளனர்.  



இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சுதந்திர தினத்தன்று ஜனாதிபதியின் பொது மன்னிப்பு கிடைக்கும் என தாம் உறுதியாக நம்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.



இன்று காலை ரஞ்சன் ராமநாயக்கவை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச, மனிதாபிமான அடிப்படையில் ராமநாயக்கவுக்கு நாளை மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.





 

ரஞ்சன் ராமநாயக்க தனது சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை பொதுமக்களுக்கு வழங்குவதன் மூலம் பொதுமக்களுக்கு சேவை செய்ததால் அவர் விடுவிக்கப்படுவார் என்று நம்புகிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.



சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை பொதுமன்னிப்பு வழங்குவதற்கான பட்டியல்கள் தங்களின் அறிவின்படி இணங்கப்பட்டுள்ளதாக பிரேமதாச தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாயக்க இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்க தகுதியானவர் என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb15

 இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நா

Mar26

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் வெஸ்ட் ரேட

Feb16

இம்மாதம் கடந்த 15 நாட்களில் நாட்டிற்கு வருகை தந்த சுற்ற

Sep20

மக்கள் எதிர்கொண்டுள்ள பட்டினிப் பிரச்சினையைத் தீர்ப

Apr04

நாட்டில் அவசர கால நிலமையில் ஏற்படுத்தப்பட்டிருந்த ஊர

Mar06

நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக

Oct22

22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம், திருத்தங்களுடன

Apr02

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப

Mar16

உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் போர் தீவிரமடைந்துள்ள நில

Mar03

பழைய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை அவசரப்பட்டு நடத்த

Feb04

நாட்டிற்காக ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புகளை நிறைவே

Aug31

யாழ் போதனா மருத்துவமனையில் நேற்று திங்கட்கிழமை நிலவர

Jan21

கொழும்பு துறைமுக நகரத்தில் புகைப்படம் மற்றும் காணொளி

Jul04

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கும், கூட்டணியின் பங்காளி

Dec13

தியத்தலாவை இராணுவக் கல்லூரிக்குள் சுவரின் இடிபாடுகள