அளுத்கம பகுதியில் கடலில் நீராடச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
அளுத்கம பொலிஸ் பிரிவில் மொரகல்ல பிரதேசத்தில் நேற்றைய தினம் 6 சிறுவர்கள் கடலில் நீராடச் சென்ற போது , நீரிழில் மூழ்கியுள்ளனர்.
இதன் போது பிரதேச மக்களால் ஐந்து சிறுவர்கள் மீட்க்கப்பட்ட போதிலும், ஒருவர் மாத்திரம் மாயமாகியுள்ளார். அதனை தொடர்ந்து கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுவன் 16 வயதுடைய களுவாமோதர , அழுத்கம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
அளுத்கம பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.