தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஆலோசனை கோரி இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதற்கான முன்மொழிவுகளை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியுள்ளதா மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் பிரவேசிக்குமா என்பது தொடர்பில் ஊடகவியலாளர்களின் தொடர்ச்சியான கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் நேற்றிரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.
மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளின் வருகைக்கு ஜப்பான் உதவுவதாகவும், இலஙகை அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு IMF திட்டத்தில் இலங்கை அரசாங்கம் நுழையக்கூடும் என்பதற்கான வலுவான சமிக்ஞை இதுவாகும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.