More forecasts: 30 day weather Orlando

மருத்துவம்

  • All News
  • சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இவற்றில் ஒன்றை தினமும் செய்து வந்தாலே போதும்....
 சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இவற்றில் ஒன்றை தினமும் செய்து வந்தாலே போதும்....
Feb 02
சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இவற்றில் ஒன்றை தினமும் செய்து வந்தாலே போதும்....

கோடை வெயில் நம்மை சுட்டெரிக்க, சருமத்தின் நிறமோ நாளுக்கு நாள் கருமையாகிக் கொண்டே போகிறது. இப்படி சருமத்தின் நிறம் கருமையாவதால் அனைவரும்  அதிக அளவில் வருந்துகிறார்கள்.

அந்தவகையில் சரும நிறத்தை எளியமுறையில் அதிகரிக்க கூடிய ஒரு சில இயற்கை வழிகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.    



உங்கள் முகத்தில் உள்ள கருமையைப் போக்க 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூளுடன், 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை போட்டு வந்தால், சருமத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.



உங்களுக்கு பருக்கள் அதிகம் வருமாயின், இந்த ஃபேஸ் பேக் சரியாக இருக்கும். இதற்க 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 2 டீஸ்பூன் கடலை மாவு மற்றும் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து, பேஸ்ட் செய்ய சிறிது நீர் அல்லது பாலை ஊற்றி கிளற வேண்டும். பின் அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.



ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் பால், 2 டீஸ்பூன் கடலை மாவு சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி நன்கு காய்ந்த பின், நீரால் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2-3 முறை போட்டாலே நல்ல மாற்றம் தெரியும்.



2 டீஸ்பூன் தேனில், 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அதோடு 3-5 துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இந்த மாஸ்க் சருமத்தை வெள்ளையாக்குவதோடு, பிம்பிள் பிரச்சனையையும் போக்க வல்லது.



ஒரு பௌலில் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் பால் சேர்த்து கலந்து, அதை முகத்தில் தடவி முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்து கழுவ வேண்டும். இப்படி இரவு முழுவதும் ஊற வைத்தால் தான் முகம் நன்கு பொலிலோடு ஜொலிக்கும். முகத்தில் உள்ள மஞ்சள் கறை நீங்க, கடலை மாவை நீரில் கலந்து பேஸ்ட் செய்து, அதைக் கொண்டு முகத்தைத் தேய்த்து கழுவுங்கள். இதனால் சரும நிறம் மேம்படும். இந்த மாஸ்க் வறட்சியான சருமம், எண்ணெய் பசை சருமம் மற்றும் முகப்பரு அதிகம் வரும் சருமத்திற்கு மிகவும் நல்லது.



1/4 டீஸ்பூன் மஞ்சள் தூளுடன், 2 டீஸ்பூன் வெள்ளரிக்காய் சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, 1 மணிநேரம் கழித்து நீரால் கழுவ வேண்டும். இப்படி மாலை வேளையில் தினமும் செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கிவிடும். விருப்பமுள்ளவர்கள், இந்த மாஸ்க்கை இரவு முழுவதும் ஊற வைத்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.   

 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep22

நத்தைச் சூரி பட்டையான தண்டுகளையும் மிகச்சிறிய பூக்கள

May09

ஆரஞ்சு நிறத்தில் கண்களைக் கவரும் கேரட்டுகள் பார்ப்பத

Jan23

பொதுவாக உணவு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கக்கூடாது.

Mar03

நம் முகத்தின் அழகை கெடுப்பது கண்ணீர்க்கு கீழ் ஏற்படும

Jan25

நீரிழிவு நோயாளிகள் கிரீன் டீ குடிப்பதால் ஏற்படும் நன்

Feb04

பிரசவத்துக்குப் பிறகு  பெண்கள் பலருக்கும்  தமது வய

Mar11

இதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்

Mar15

இன்று பெரும்பாலான சிறுவர்கள், பெரியவர்கள் நகம் கடிப்ப

Oct05

தேங்காய் பால் சாப்பிடுவதால் நீரழிவு நோய் குணமாகும், உ

May04

வாழைப்பூ உணவுக்கு மட்டும் இன்றி, ஆயுர்வேதத்தில் ஒரு ம

Mar22

வெந்தய விதைகள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.

Feb22

முளைக்கட்டிய பயிறில் ஏரளமான புரதசத்துக்கள் அடங்கியு

Jan19

இன்றைய காலக்கட்டத்தில் உயிரை பறிக்கும்  முக்கிய நோய

Feb06

தற்போது வெள்ளை அரிசி மோகத்திலிருந்து பாரம்பரிய அரிசி

Jan27

கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால், ஊட்டச்சத்