பாரதி கண்ணம்மா சீரியல் விஜய்யில் செம ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.
கடந்த வாரம் பாரதி கண்ணம்மாவை ஏற்றுக்கொண்டது போல் பல காட்சிகள் வைத்து பின் கடைசியில் பழைய குருடி கதவைத் திறடி என்பது போல் மீண்டும் பாரதி பழைய விஷயத்தையே கையில் எடுத்தார்.
இப்போது கண்ணம்மா எனது பிறந்தநாளில் லட்சுமி அப்பா யார் என்பதை கூறுவேன் என கூறியிருக்கிறார்.
இதற்கு இடையில் பாரதி வெண்பா வீட்டில் தங்க அவரது வீட்டிற்கு செல்ல முடிவு எடுக்கிறார். தற்போது இந்த பாரதி கண்ணம்மா சீரியலின் புரொமோ ஒன்று வந்துள்ளது.
அதில் வெண்பா பாரதி மற்றும் லட்சுமியை ஆரத்தி எடுத்து வீட்டிற்கு வர வைக்க கண்ணம்மா ஒரு பிளான் போட்டு வந்த வேகத்தில் பாரதியை வீட்டைவிட்டு கிளம்ப வைக்கிறார்.