நடிகர் அஜித்தின் 60வது படமான வலிமை படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆக உள்ளது. அதே நேரத்தில் அஜித் தனது அடுத்த படத்திற்கான ஷூட்டிங்கை தொடங்க இருக்கிறார். மார்ச் 9ம் தேதியில் இருந்து அஜித் 61 படத்தின் ஷூட்டிங் நடக்க இருக்கிறது என தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் தற்போது இந்த படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள் பற்றிய விவரங்கள் வெளிவந்து இருக்கிறது. ஹீரோயினாக அதிதி ராவ் நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
அதிதி ராவ் தமிழில் காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம், சைக்கோ ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது அவர் அஜித் ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.