More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக இளம் விரிவுரையாளர் உயிரிழப்பு
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக இளம் விரிவுரையாளர் உயிரிழப்பு
Feb 02
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக இளம் விரிவுரையாளர் உயிரிழப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கை நெறியின் தற்காலிக  உதவி விரிவுரையாளராக பணியாற்றிய இளம் ஊடகவியலாளரான தில்காந்தி நவரட்ணம் உயிரிழந்துள்ளார்.



நேற்றைய அதிகாலை 5 மணியளவில் சுகவீனம் காரணமாக  மொனராகலை-சிறுகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தில்காந்தி, என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.



மொனராகலை மரக்கலையை சேர்ந்த தில்காந்தி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடக கற்கை நெறியை மேற்கொண்டார்.



பின்னர், அதே பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றினார். ஏற்கனவே 6 மாதங்களுக்கு முன்னர் அவருக்கு இருதய சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.ஊவா மாகாணத்தின் பின்தங்கிய பிரதேசம் ஒன்றில் இருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றியதன் மூலம் தில்காந்தி தமது சொந்த ஊருக்கும் மலையகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.



அத்துடன் செய்தி வாசிப்பு மற்றும்  நிகழ்ச்சிகளை தொகுத்தளித்தல் போன்ற துறைகளிலும் அவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொண்டிருந்தபோதே தமது திறமையை அவர் வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr08

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பேச

Nov05

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லாவெரடுவுக்கும், இ

Jul14

தெல்லிப்பழை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் இர

Oct05

வெளிநாட்டு வேலைகளுக்காக இந்த வருடத்தின் நேற்று 4 ஆம் த

Jun07

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதி

Aug29

பருத்தித்துறை, மந்திகை ஆதார வைத்தியசாலை வெளிநோயாளர் ப

Aug31

தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்து நீண்ட காலம் பெரும் சிர

Mar28

இலங்கை பாராளுமன்றத்தின் 17ஆவது சபாநாயகரும் முன்னாள் ப

May18

யாழ்.திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்க

Oct22

ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை 250 ரூபாயால் குற

May13

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்ட கொ

Apr08

கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் 03 பேர

Oct01

காந்தியின் அகிம்சைப்போராட்டத்தினையும் தியாகத்தினைய

Oct05

முல்லைத்தீவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கட

Jun11

தற்போது நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத்தடை எதிர்வரு