More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பம்பலப்பிட்டியில் 7வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த சிறுவன்! - பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்
பம்பலப்பிட்டியில் 7வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த சிறுவன்! - பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்
Feb 01
பம்பலப்பிட்டியில் 7வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த சிறுவன்! - பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்

கொழும்பு - பம்பலப்பிட்டி பகுதியில் தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த 15 வயது சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.



இதன்படி, குறித்த சிறுவன் ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுவன் கடந்த 28ம் திகதி பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பின் 7வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தார்.



இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த நீதவான் சிலானி பெரேராவின் உத்தரவின் பேரில் சட்டத்துறை வைத்திய அதிகாரி விசேட வைத்தியர் ராகுல் ஹக்கினால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.



பிரேத பரிசோதனை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் நடைபெற்றது. சிறுவன் உயிரிழந்த தினத்தன்று பெற்றோர் வீட்டில் இல்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.



குறித்த சிறுவன் கடந்த 28ம் திகதி வெள்ளிக்கிழமை மதியம் 2.30 மணியளவில் பாடசாலை முடிந்து வீடு திரும்பியதாகவும், அன்றைய தினம் பிரத்தியேக வகுப்புகள் இடம்பெறாது என சிறுவன் தனது தாயிடம் தொலைபேசி ஊடாக கூறியுள்ளார்.



இதேவேளை, குறித்த தொடர்மாடி குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் அன்று மதியம் பலத்த சத்தம் கேட்டதாகவும், சிறுவன் தரையில் வீழந்து கிடப்பதைப் பார்த்ததாகவும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.



சிசிடிவி காட்சிகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் சிறுவனின் மரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec12

தென்னாபிரிக்கா, பொட்ஸ்வானா, லெசோத்தோ, நம்பியாவ, சிம்பா

Jun14

இலங்கை சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு தமது உறவுகளை

Feb02

ஹெரோய்ன், ஐஸ் உள்ளிட்ட பெருந்தொகை போதைப்பொருள் கடத்தல

Jan21

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளி

Sep22

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வருவதற்கு

Oct20

குத்தகை தவணையை செலுத்த அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை

Sep23

வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆ

Oct22

சதொசயில் பொருட்களைக் கொள்வனவு செய்யும்போதுஇ சிவப்பு

Mar07

வவுனியா, குட்செட் வீதி, உள்ளக வீதியில் அமைந்துள்ள வீடொ

Apr11

வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் நேற்று மாலை (10) யா

May11

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இலங்கை உள்ளி

Mar30

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் சனிக்கிழமை (03) வவ

Sep23

இந்தியாவும் இலங்கையும் இரு நாடுகளுக்கும் இடையே முன்ம

Jul10

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஜூலை 13 ஆம் திகதியுடன் பதவி வ

Jul08

அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த பத