More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கொலை மிரட்டல் விடுத்து ஊடகவியலாளர் மீது வானில் வந்தோர் தாக்குதல்
கொலை மிரட்டல் விடுத்து ஊடகவியலாளர் மீது வானில் வந்தோர் தாக்குதல்
Feb 01
கொலை மிரட்டல் விடுத்து ஊடகவியலாளர் மீது வானில் வந்தோர் தாக்குதல்

சாவகச்சேரி கச்சாய் வீதிப் பகுதியில் மின்சாரசபையை அண்மித்த பகுதியில் இன்று மதியம் வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்ற ஊடகவியலாளர் மீது வானில் வந்தோர் தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பித்துச் சென்றிருப்பதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.



சாவகச்சேரியைச் சேர்ந்த தவராசா சுபேசன் என்ற 27வயதான ஊடகவியலாளரே இவ்வாறு முகம் மற்றும் கைகளில் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.



சாவகச்சேரி நகரசபையில் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்ட பின்னர் கச்சாய் வீதி ஊடாக சென்ற ஊடகவியலாளரை மோதிக்காயப்படுத்தும் வகையில் வான் ஒன்று ஊடகவியலாளர் பயணித்த மோட்டார் சைக்கிளின் முன்பாக நிறுத்தப்பட்டுள்ளது.



பின்னர் வானில் இருந்தவர்களில் ஒருவர் பொல்லுகள் மற்றும் கல் ஆகியவற்றால் ஊடகவியலாளரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு வானில் ஏறித் தப்பித்துச் சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.



இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan28

திருகோணமலையில் மஜாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சா

May04

பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் இருந்து ஆடைத் தொழிலாள

Mar20

முல்லைத்தீவு மாவட்டம் - புதுக்குடியிருப்பு பகுதியில்

Jan28

தனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் ம

Jan27

வடக்கு மாகாணத்தில் மருத்துவர்கள், தாதியர்கள் உட்பட்ட

Mar08

உலகில் பெண்களின் உரிமைகளுக்காக ஒரு தினம் கொண்டாடப் பட

Jun02

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மகிந்த கஹந்தகமகே குற்றப

Jun09