More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • இலங்கை நடிகையை பிச்சை எடுக்க வைத்த பிரபல தமிழ் இயக்குனர்: அவரே சொன்ன தகவல்!!!
இலங்கை நடிகையை பிச்சை எடுக்க வைத்த பிரபல தமிழ் இயக்குனர்: அவரே சொன்ன தகவல்!!!
Jan 30
இலங்கை நடிகையை பிச்சை எடுக்க வைத்த பிரபல தமிழ் இயக்குனர்: அவரே சொன்ன தகவல்!!!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் பிரபல இயக்குனர் பாலா. இவர் இயக்கிய படங்களுமே ரசிகர்களுக்கு கண்ணீர் வர செய்யும் அளவிற்கு தன்னுடன் பணியாற்றும் நடிகர், நடிகைகளை வேலை வாங்குவார். இதனாலே அவர் இயக்கும் படங்களில் அனைத்தும் திரையுலகில் பெரிய அளவில் பேசப்படுகிறது.



பாலா இயக்கிய சேது, நந்தா, பிதாமகன், அவன் இவன், பரதேசி, நான் கடவுள், தாரை தப்பட்டை,  போன்ற படங்களில் நடிகர், நடிகைகளின் தோற்றத்தையே முற்றிலுமாக மாற்றி இருப்பார். பாலாவால் பட்ட கஷ்டத்தை வெளிப்படையாக ஒரு நடிகை கூறியுள்ளார்.



தமிழ் சினிமாவில் ஜேஜே படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா. அதன்பிறகு இவர் அட்டகாசம், உள்ளம் கேட்குமே, தம்பி, பட்டியல், பொறி, ஜித்தன் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர்.  



பூஜாவின் திரை வாழ்க்கையில் முக்கியமான பேசப்பட்ட படம் நான் கடவுள். பாலாவின் இயக்கத்தில் உருவான இப்படத்தில் பார்வை இழந்த பெண்ணாக நடித்திருந்தார். பாலாவின் படங்களில் நடிகர், நடிகைகள் தோற்றத்தாலும், நடிப்பாலும் கஷ்டப்படுவது புதிதல்ல.



நான் கடவுள் படத்தில் பாலாவால் பல கஷ்டத்தை பூஜா அனுபவித்து உள்ளார். இப்படத்தில் பூஜாவின் கருவிழி தெரியாத அளவுக்கு லென்ஸ் வைத்து விடுவார்களாம். இப்படத்தில் ஒரு காட்சியை மட்டுமே பத்து நாட்கள் பாலா எடுத்ததாக பூஜா தெரிவித்துள்ளார்.



மேலும் அவருக்கு அவர் எடுக்கும் காட்சி திருப்தி அளித்தால் மட்டுமே அடுத்த காட்சிக்கு செல்வாராம். சூட்டிங் எப்படி எடுக்கிறார்கள் என்று கூட பூஜாவால் பார்க்க முடியாதாம். தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதால் இவ்வாறு பல கஷ்டங்கள் பட்டுள்ளார் பூஜா.



இப்படத்தில் பிச்சை எடுக்கும் காட்சிகளில் பொதுமக்கள் உண்மையாகவே பிச்சை போட்டு உள்ளார்கள் என்று கூறியுள்ளார். இது பூஜா தான் என்று தெரியாத அளவுக்கு தோற்றத்தையே மாற்றி உள்ளார் பாலா. என்னதான் இருந்தாலும் பூஜாவின் திரை வாழ்க்கையில் மறக்க முடியாத படம் நான் கடவுள் ஆகும்.

 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct07

சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாயோன்’  ப

Aug06

நடிகர் தனுஷை வைத்து யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்த

May02

கதாநாயகி சமந்தா

தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள

Jun08

 இந்திய சினிமாவில் முன்னனி நாயகியாக வலம் வரும் நயன்த

Feb15

நடிகர் ரஜினியின் மனைவி லதா, இசையமைப்பாளர் அனிருத் மீத

Jan28

கன்னட திரையுலகில் டாப் நடிகராக திகழ்ந்து வந்த புனித்

Mar26

கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள படம் சுல்தான். இதனை ரெ

Mar26

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இன்று சாண்டி மாஸ்டர

Jun18

குற்றம் 23’ படத்தை அடுத்து அருண் விஜய்யும், இயக்குனர்

Aug14

விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில

Jan19

இசையமைப்பாளர் இளையராஜா மக்களால் பெரிய அளவில் கொண்டாட

May25

 நடிகை வனிதா விஜயகுமாரின் மகனுக்கு 21 வயதான நிலையில் 21

Feb04

ஜஸ்வர்யாவை தொடர்ந்து சவுந்தர்யாவும் தனது கணவருடன் பி

May03

விஜய்யின் பீஸ்ட் படம் ரிலீஸ் ஆன நேரத்தில் அதை யோகி பாப

Feb12

விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா என்ற தொடர் படு