கொழும்பு, பம்பலப்பிட்டி- கிரிஸ்டல் வீதியின் வீட்டு மாடியில் இருந்து வீழ்ந்து மரணமான 15வயது சிறுவனின் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.
இதனையடுத்தே மரணத்துக்கான காரணத்தை கண்டறியமுடியும் என்று பம்பலப்பிட்டிய காவல்துறையினர் எமது செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளனர்..
குறித்த சிறுவன், கடந்த 28ஆம் திகதியன்று மாலையில் 7 மாடியில் இருந்து வீழ்ந்த நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்ட பின்னர் மரணமானார்.
இந்தநிலையில் பம்பலப்பிட்டி காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.