கடந்த 2021ஆம் ஆண்டு 23 சதவீதத்தினால் திடீரென நாட்டின் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, இலங்கை கடந்த 2021ஆம் ஆண்டில் 15.12 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தைப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது 2020இல் அறிவிக்கப்பட்ட 12.3 பில்லியன் அமெரிக்க டொலர்களில் 23% சதவீத அதிகரிப்பாகுமெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.