இலங்கை, தற்போது கட்டிட நிர்மாணத்துறையில் மூன்று மெற்றிக் தொன் சீமெந்து பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் சுசந்த ரஞ்சித் லியனாராச்சி தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக, சிமெந்து உற்பத்தி திறன் மற்றும் இறக்குமதி குறைந்துள்ளது.
எனவே, தேவையான கட்டுமானப் பொருட்களுக்கு தேக்கநிலை ஏற்பட்டது.
கடந்த ஆண்டில், மாத்திரம், இலங்கையில் ஏழு மெற்றிக் தொன் சீமெந்து கட்டுமானத்திற்காக பயன்படுத்தப்பட்டது.
இந்தநிலையில் தற்போதைய கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மூன்று மெற்றிக் டன் பற்றாக்குறையாக உள்ளது.