தன்னுடைய மகளான ஐஸ்வர்யாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் நோக்கிலே விவாகரத்து நாடகம் நடந்ததாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று வெற்றிகொடி நாட்டியிருக்கிறார் நடிகர் தனுஷ், சமீபத்தில் இவர் நடித்த அட்ராங்கி ரே படம் வெற்றி பெற்றது.
மருமகனின் இந்த வளர்ச்சியை பார்த்து ரஜினி மெய்சிலிர்த்து போன நிலையில், வெளியாகியிருக்கிறது விவாகரத்து அறிவிப்பு.
இதை அவர் எப்படி எடுத்துக்கொள்வாரோ என ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ள சூழலில், இது ஒரு திட்டமிட்ட நாடகம் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
அதாவது, ரஜினிக்கு தனது மகள்கள் நிம்மதியான குடும்ப வாழ்க்கையை வாழ்ந்தால் போதும் என்கிற விருப்பம் தான் எப்போதும் உண்டாம்.
சவுந்தர்யா தன் ஸ்டுடியோ வேலைகளை பார்த்த போது கூட ரஜினி கண்டித்ததாக தெரிகிறது.
தன் மூத்த மகளும், ஏற்கனவே 3, வை ராஜா வை போன்ற படங்களை எடுத்திருக்கிறார், ஆனால் சில மாதங்களாக ஐஸ்வர்யாவின் பழக்கம் திருப்திகரமாக இல்லையாம்.
இதனால் ஐஸ்வர்யாவுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக விவாகரத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்களாம்.
அதாவது தனுஷ் மூலம் சிறு பிரிவு நாடகம் நடத்தப்பட்டதாக திரை உலகில் பேசப்படுகிறது. இந்த தகவல் ஐஸ்வர்யாவுக்குப் பெரிய அதிர்ச்சி தகவல் தான்.
இது ஒருபக்கம் இருக்க, தனுஷ் இந்த முடிவை விலக்கிக்கொள்ள திரையுலகினர் பலர் தொடர்ந்து ஈடுபட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
இருவருக்குமான பிரிவு என்பது அவ்வளவு எளிதாக நடந்து விடாது என்கிறார்கள், இதனால் தனுஷ்- ஐஸ்வர்யா பிரிவு விரைவில் சுமூக முடிவுக்கு வந்து விடும் எனவும் கூறப்படுகிறது.