More forecasts: 30 day weather Orlando

சிறப்பு பார்வை

  • All News
  • இலங்கை தமிழ் குடும்பத்திற்கு கிடைத்த மாபெரும் வாகை !
இலங்கை தமிழ் குடும்பத்திற்கு கிடைத்த மாபெரும்  வாகை !
Jan 24
இலங்கை தமிழ் குடும்பத்திற்கு கிடைத்த மாபெரும் வாகை !

நாடுகடத்தலுக்கு எதிராக சட்டப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் இலங்கை தமிழ் குடும்பமான பிரியா-நடேஸ் குடும்பம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில், அவர்களுக்கு சார்பாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.



இதேவேளை, பிரியா, அவரது கணவர் நடேஸ் மற்றும் மூத்த மகள் கோபிகா ஆகியோர் தமது bridging விசாவை புதுப்பிக்கமுடியாதவகையில் குடிவரவு அமைச்சர் மேற்கொண்டிருந்த நடவடிக்கையில், procedural fairness- பரிசீலனை சார்ந்த நியாயத்தன்மை பேணப்படவில்லை என Federal Circuit நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



மேலும், பிரியா - நடேஸ் குடும்பத்தினரின் குறித்த விசா விண்ணப்ப விவகாரத்தில் குடிவரவு அமைச்சர் Alex Hawke குடிவரவுச் சட்டத்திலுள்ள “lower the bar” என்ற அம்சத்தை முன்மொழிந்திருப்பதாக கடந்த ஆண்டு ஜுன் மாதம் இக்குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்டதைத்தொடர்ந்து, பிரியா, நடேஸ் மற்றும் கோபிகா ஆகிய மூவருக்கும் 12 மாதங்களுக்கான bridging விசா வழங்கப்பட்டது.



இருப்பினும், இரு மகள் தருணிகா இதில் உட்படுத்தப்படவில்லை. குடிவரவு அமைச்சரால் முன்மொழியப்பட்ட “lower the bar” அடிப்படையில் பிரியா, நடேஸ் மற்றும் கோபிகா ஆகியோர் bridging விசாவிற்கு மீளவும் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு நீக்கப்பட்டது.



தருணிகா ஏற்கனவே தாக்கல் செய்திருந்த விண்ணப்பம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், இந்த விசாரணை முடியும் வரை அவர் நாடுகடத்தப்படக்கூடாது எனவும் நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பின் அடிப்படையில், இவ்விவகாரம் குடிவரவு அமைச்சரின் முடிவுக்காக காத்திருப்பதால், தருணிகாவுக்கு bridging விசா வழங்கப்படவில்லை என உள்துறை அமைச்சு தெரிவித்திருந்தது.





இந்த குடும்பம் நீண்டதொரு சட்டப்போராட்டத்தை மேற்கொண்டுவரும் பின்னணியில், எதிர்காலத்தில் பிரியா குடும்பத்தின் bridging விசாவை மீளப்பெறுவதற்கான எந்த முடிவும் மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் வாய்ப்பினை இந்த வெற்றி பெற்றுத்தந்துள்ளதாக, இக்குடும்பத்தின் சட்டத்தரணி Carina Ford தெரிவித்துள்ளார்.

Federal Circuit நீதிமன்றின் இத்தீர்ப்பிற்கு எதிராக அரசு மேன்முறையீடு செய்யலாம் அல்லது செய்யாமல் விடலாம் என Carina Ford மேலும் தெரிவித்தார்






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar04

ஜப்பானில் சுமார் 1300 ஆண்டுகளாக ஹோட்டல் ஒன்று இயங்கி வரு

Mar08

பொதுவாக யானைகளின் குறும்புத்தனம் என்றால் அதனை எத்தனை

Jan25

இலங்கையில் அந்நிய  செலாவணி கையிருப்பு வேகமாக தீர்ந்

Jan20

கொரோனா தடுப்பூசி செலுத்திய நீரிழிவு நோயாளிகளுக்கு மு

May28

அமெரிக்காவில் காபி குடிக்க பால் வாங்குவதற்கு மளிகை கட

Feb04

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் பெண்கள் கருத்தரி

Feb06

உலக பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை சிறப்

Mar29

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கை தொடர்பான அறிக்கையை

Feb11

பாராசிட்டமால் மாத்திரையை தினமும் பயன்படுத்தினால் இர

Feb03

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் உதவி

Feb24

அன்பர்களுக்கு பேச்சிலும் செயல்பாடுகளிலும் நிதானத்தை

Feb16

இலங்கையில் வெளிநாட்டவர்கள் தமது திருமண நிகழ்வுகளை நட

Feb04

இயற்கை என்றுமே அதிசயம் மிக்கதும், அதிக சுவாரசியம் கொண

Mar05

உக்ரைனில் உள்ள அணுமின் நிலையத்தை எறிகணைத் தாக்குதலுக

Feb15

விளையாட்டிற்கு கூட தந்தையை அடிக்காமல் சிறுமி ஒருவர் த