More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • சர்ச்சையில் சிக்கிய கம்பவாரிதி
சர்ச்சையில் சிக்கிய கம்பவாரிதி
Jan 24
சர்ச்சையில் சிக்கிய கம்பவாரிதி

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் தலமைத்துவ பயிற்சியை வழங்கலாம் என கூறிய கம்பவாரிதி இராணுவத்திற்கு வெள்ளையடிக்கும் வேலையை செய்கிறார். என யாழ்.பல்கலைக்கழக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் வசந் கண்டனம் தெரிவித்தார்.



கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கம்பவாரிதி ஜெயராஜ் தெரிவித்த கருத்து தொடர்பில் யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போதைய அரசாங்கத்தில் அரசியல் , சிவில் செயற்பாடுகள் மற்றும் பல்கலைக்கழகம் போன்றவற்றில் இராணுவ தலையீடுக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் புத்திஜீவிகள் போராடி வரும் நிலையில் இராணுவ முகாமில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சியை வழங்குவதை வரவேற்று கருத்து தெரிவித்திருப்பது எமக்கு மன வேதனையைத் தருகிறது.



கொத்தலாவல இராணுவப் பல்கலைக்கழகத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரும் செயற்பாட்டுக்கு எதிராக இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் என்பன ஒன்றிணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் கம்பவாரிதியின் கருத்தை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.



கம்பவாரிதி பல்கலைக்கழக மாணவர்களின் தலைமைத்துவம் தொடர்பில் தெரிவித்த கருத்தையும் நாம் வன்மையாக கண்டிக்கிறோம் ஏனெனில் பல்கலைக்கழகங்களில் தலைமை தாங்குபவர்களை அச்சுறுத்துவதும் அழுத்தங்கள் மூலம் அவர்களை அதிலிருந்து விலக்கிவைக்கும் செயற்பாடு அதிகம் இடம்பெற்று வருகிறது.



இதற்கெல்லாம் அறியாதவர்கள் போல் கற்றறிந்த சமூகத்தில் இருப்பவர்கள் தெரிவித்த கருத்து பல்கலைக்கழக மாணவர்களை கொச்சைப்படுத்துவதாகவே பார்க்கிறோம். தலைமைத்துவம் ஏன் எமது சமூகத்தில் குறைவடைந்து செல்கின்றது என்பதை முதலில் அவர் ஆழமாக ஆராய வேண்டும்.



ஆகவே கம்பவாரிதியின் கருத்து தொடர்பில் ஏனைய பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்களுடன் கலந்துரையாடி எதிரான போராட்டம் ஒன்றை மேற்கொள்ள தயாராக இருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep21

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் அரிசியை உட்கொள்வத

May01

நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வரும் ரூபாவின் பெறுமதி

Mar28

லொறியுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதி

Apr10

எதிர்வரும் மே மாதம் 15ம் திகதி நடத்தப்படவிருந்த 2022ம் ஆண

Sep21

ஒன்றாய் எழுவோம்' எனும் தொனிப்பொருளில் 75ஆவது சுதந்திர

Jan18

கண்டி நகரத்தில் உள்ள இரண்டு மாளிகைகளில் இருந்த இரண்டு

Sep15

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அ

May16

நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத் தடை நாளை (17) அதிகாலை ந

Jun12

 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில்

Feb16

பொத்துவில் – பொலிகண்டி பேரணியில் கலந்துகொண்டமை தொடர

Jul16

நாடு மிகவும் மோசமான கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை எதிர

Oct08

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் 'ஒன்றாக எழுவோம் – களு

Sep08

இலங்கையை திவாலாக்கியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப

Sep20

நாட்டில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் தற்போது கடுமையா

Jul24

தமிழர்களுக்கான அரசியல் தீர்வைப் பொறுத்தவரை, மாகாணசபை