More forecasts: 30 day weather Orlando

செய்திகள்

  • All News
  • போர் உக்கிரமடையும் பட்சத்தில் புடினை நேரடியாக குறிவைக்கத் தயாராகும் அமெரிக்கா!
போர் உக்கிரமடையும் பட்சத்தில் புடினை நேரடியாக குறிவைக்கத் தயாராகும் அமெரிக்கா!
Feb 25
போர் உக்கிரமடையும் பட்சத்தில் புடினை நேரடியாக குறிவைக்கத் தயாராகும் அமெரிக்கா!

உக்ரைன் ரஷ்யா போர் நிலைமை தீவிரமடையும் பட்சத்தில், புடினை நேரடியாக குறிவைக்க தற்போதுள்ள அமெரிக்க தடைகளை விரிவாக்குவதற்கான சாத்தியம் இன்னும் மேசையில் உள்ளது என அமெரிக்க தெரிவித்துள்ளது.



அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனமான ஏபிசிக்கு அளித்த செவ்வியிலேயே அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இவ்வாறு தெரிவித்துள்ளார். 



இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 



உக்ரைனுக்கு அப்பால் ரஷ்யாவின் தாக்குதலுக்கு சாத்தியம் இருப்பதாகவும், அத்துடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைன் அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிப்பார் என்று தான் உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.



மேலும் ரஷ்யா வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கிலிருந்து உக்ரைன் மீது பலமுனைத் தாக்குதலை நடத்துவதுடன், தலைநகர் கீவ் மற்றும் உக்ரைனில் உள்ள பிற முக்கிய நகரங்களைத் தாக்குவதே திட்டத்தின் ஒரு பகுதி எனவும் தெரிவித்துள்ளார்.



உக்ரைனுக்கு அப்பால் ஒரு ரஷ்ய தாக்குதல் சாத்தியம். ஆனால் நேட்டோ நட்பு நாடுகளைப் பாதுகாப்பதில் அமெரிக்காவின் உறுதியாக இருக்கும். நேட்டோவின் ஒரு உறுப்பினர் மீதான தாக்குதலும் நேட்டோவின் அனைத்து உறுப்பினர்கள் மீதான தாக்குதலாகும்.



நேட்டோ பிரதேசத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் நாங்கள் பாதுகாப்போம் என்பதில் அமெரிக்க அதிபர் பைடன் மிகவும் தெளிவாக இருக்கிறார். உக்ரைனுக்கு அப்பால் செல்லும் புடினுக்கு எதிரான மிக சக்திவாய்ந்த தடுப்பு இதுவாகும் எனவும் தெரிவித்துள்ளார்.



பல தசாப்தங்களில் ஐரோப்பாவில் நடந்த முதல் பெரிய தரைப் போரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ரஷ்யாவின் படையெடுப்பின் இரண்டாம் நாளில், உக்ரைனின் தலைநகரான கீவ் நோக்கி ரஷ்ய வீரர்கள் முன்னேறி வருகின்றனர்.



இந்தநிலையில், சுமார் 100,000 உக்ரேனியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக ஐ.நா அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb10

கனவு காண்பது என்பது மனிதனுக்கு ஒரு சாதாரண விஷயம் தான்.

Mar08

உக்ரைனில் தாக்குதலை நிறுத்திவிட்டு மனிதாபிமான வழித்

Feb28

உக்ரைன் மீதான ரஷிய போர் இன்று 5-வது நாளாக நீடிக்கிற நில

Mar05

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து உலகம

Mar09

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் மாற்

Feb20

கடந்த 18 மாதங்களில் 168 மாணவர்கள் மற்றும் இளைஞர்-யுவதிகள்

Feb18

கடந்த இரண்டு நாட்களாக ஆப்கானிஸ்தானில் 33 அடி ஆழமுள்ள கி

Feb28

ரஷ்ய ராணுவத்திடம் சரணடையாத உக்ரைன் ராணுவ வீரர்களின் க

Mar09

அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் 5 வயது சிறுவன் அடித்ததில்,

Mar08

Poissy (Yvelines) இல் நேற்றுஇம்மானுவல் மக்ரோனின்(Emmanuel Macron) தேர்தல் வ

Feb27

உக்ரைனை ஆக்கிரமிக்க முற்படும் ரஷ்யப் படைகளின் முன்னே

Jan27

கொழும்பு புறநகர் பகுதியான பாணந்துறையில் வைத்தியசாலை

Feb23

தங்கம் விலையானது இன்றைய வாரத்தில் ஏற்றம் இறக்கம் கண்ட

Mar08

உக்ரைனின் சண்டையில் ஈடுபட்டுள்ள ரஷ்ய படையினரின் தாய்

Feb26

 உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு அழ