கடந்த வருடம் வெளிவந்து சூப்பர்ஹிட்டான திரைப்படங்களில் ஒன்று சிம்புவின் மாநாடு.
வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருந்த மாநாடு படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார்.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்று, இப்படம் சிம்புவின் கம் பேக் படமாக அமைந்தது.
இந்நிலையில், இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது சிம்பு கிடையாதாம்.
ஆம், நடிகர் ஜெய் தான் முதன் முதலில் மாநாடு படத்தில் நடிப்பதாக இருந்ததாம்.
ஆனால், சில காரணங்களால் இப்படத்தில் நடிக்கமுடியாமல் போக, அதன்பின் சிம்பு இப்படத்தில் கமிட்டாகியுள்ளார் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.