நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸ் ஷோ மூலமாக தான் தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்தார். பிக் பாஸ் ஷோவுக்கு பிறகு அவருக்கு பல்வேறு பட வாய்ப்புகளும் குவிந்தது. இந்நிலையில் தற்போது நடந்துவரும் பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
இந்த ஷோ 24 மணி நேரமும் ஒளிபரப்பாகிறது என்பதால் போட்டியாளர்கள் பற்றிய பல்வேறு விஷயங்கள் ரசிகர்களுக்கு தெரியவந்தது. வனிதா பிக் பாஸ் வீட்டில் பல சண்டைகளில் இருந்ததும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
நேற்று தான் வனிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் கிளம்பி இருக்கிறார். அவரது mental health பாதிக்கிறது என சொல்லி இந்த முடிவை அவர் எடுத்ததாக தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது வனிதா இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை போட்டிருக்கிறார்.
"என்னை திமிர்பிடித்த, அகங்காரமான நபர் எனநினைப்பவர்களும். ஆம் நான் அப்படித்தான். அதற்கு நான் தகுதியானவள் தான். அதை ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் அது உங்கள் பிரச்சனை, அது என் பிரச்சனை இல்லை. எனக்கு நான் தான் முக்கியம்" என தெரிவித்து உள்ளார்.