ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இராணுவ நடவடிக்கை தொடர்பில் அறிவித்ததால், ஏழு ஆண்டுகளுக்கும் பின் முதல் முறையாக எண்ணெய் விலை 100 டொலருக்கு மேல் உயர்ந்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை ஆசிய பங்குச் சந்தைகளும் கடந்த சில நாட்களாக கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன.
இந்த நிலையில் அண்மைக்காலமாக அமெரிக்க டொலர் மற்றும் ஜப்பானிய யென் ஆகியவை வலுவடைந்துள்ளன.